கடும் வெப்பம்: ஜூன் 12ம் தேதிக்குத் தள்ளிப் போன பள்ளிகள் திறப்பு!

school exams - 2026
  • தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு
  • 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும்
  • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெப்ப அலை நீடித்து வருவதால், பள்ளி மாணவ்ர்களின் நலனை முன்னிட்டு, பள்ளிகள் திறப்பு ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை காலம். இந்தாண்டு மார்ச் தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மார்ச் மாத 2வது வாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஏப்ரல் மாதத்தில்  வெப்ப அனல்காற்று வீசியது. மே மாத முடிவில் அக்னி நட்சத்திர காலம் முடிந்ததும் வழக்கமாக வெப்பம் குறையும். ஆனால் கடந்த 28ம் தேதி அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப் படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல்  வெப்ப நிலை பதிவாகி இருந்தது. 

வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.  அதன்படி தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையில் ஜூன் 5ம் தேதியும், 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், ஜூன் 1ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று  தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால், மே மாத இறுதியிலும் வெயில் தாக்கம் அதிகம் காரணமாக பள்ளிகள் திறப்பை 7ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில்  அக்னி நட்சத்திர காலம் முடிந்தும் வெய்யிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், தற்போதும் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories