
மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 24.08.2023 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அனுப்பப்பட்ட சந்திராயன் 3 ராக்கெட் நிலவில் நிலைநிறுத்த பட்ட இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கொண்டாடினார்கள்.
இந்திய ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த சந்திராயன் 3 விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர காரணமாக இருக்கிறது என்று மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நல்ல நிகழ்வை கொண்டாடும் விதமாக பள்ளியில் காலை பிரார்த்தனை கூடத்தில்.. பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
சந்திராயன் 3 நிலவில் கால் பதித்த இந்தத் திட்டத்தில் மேலப்பாவூர் அரசு மேல் நிலையில் படித்த திருச்சிற்றம்பலத்தைச் சார்ந்த மாணவர் திரு சண்முகவேல் அவரும் பங்காற்றி உள்ளார் என்ற செய்தியை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கரகோஷம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு பாக்கியநாதன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
பழைய மாணவர் சங்க பொறுப்பாளர் திரு பாலகிருஷ்ணன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.