December 6, 2025, 5:44 PM
29.4 C
Chennai

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 46வது பட்டமளிப்பு விழா!

thiruvedagam vivekananda college conacatgion - 2025
#image_title

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,
திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் 17.02.2024 சனிக்கிழமை இன்று ஏப்ரல் 2022- ல் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ரவி சிறப்பு விருந்தினராக பங்குபெற்றார். கல்லூரியின் தேசிய மாணவர் படையின் அதிகாரி கேப்டன் ராஜேந்திரன் ஒருங்கிணைப்போடு கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில் தலைமை விருந்தினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

முக்கியஸ்தர்கள் முறையாக பட்டமளிப்பு விழா மேடைக்கு ஊர்வலமாக சென்றனர். கல்லூரி பிரார்த்தனை பாடல் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் பட்டமளிப்பு விழாவை கல்லூரி செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ரவி பட்டமளிப்பு விழா உரை ஆற்றினார்.

முறையாக துறைத் தலைவர்கள், அந்தந்த துறையின் பட்டதாரிகளின் பெயர்களை வாசிக்க 285 பட்டதாரிகள் சிறப்பு விருந்தினரிடமிருந்து பட்டங்களை பெற்றுக் கொண்டனர். அடுத்த நிகழ்வாக முதல்வர் வெங்கடேசன் பட்டமளிப்பு விழாவின் உறுதி மொழியினை பட்டதாரிகளுக்கு வாசிக்க பட்டதாரிகள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.

விவேகானந்த கல்லூரியின் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த, துணை முதல்வர் கார்த்திகேயன், முதன்மையர் ஜெயசங்கர் மற்றும் அகத்தர மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் விழாவை சிறப்பித்தனர். பெற்றோர்கள், தாய்மார்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில், திரளாகப் பங்கேற்றார்கள்.

இந்நிகழ்ச்சி தேசியகீதத்துடன் நிறைவு பெற்றது. முக்கியஸ்தர்கள் முறையாக பட்டமளிப்பு  விழா முடிவடைந்தும் மேடையிலிருந்து  ஊர்வலமாக சென்று விழாவினை முடித்து வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories