
10 ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் ஏகப்பட்ட கிரியேட்டிவ் கேள்விகள் இடம் பெற்றுள்ள. இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
5 ஒரு மதிப்பெண் வினா, 7 இரண்டு மதிப்பெண் வினாக்கள், 3 ஐந்து மதிப்பெண் வினாக்கள் க்ரியேட்டிவ் கேள்விகளாகக் கேட்கப்பட்டுள்ளது.
சராசரி மாணவர்கள் 5 ஐந்து மதிப்பெண் வினாக்கள் மட்டுமே ஏதிர்கொண்டு எழுத முடியும். 9 வினாக்களில் Geometery, graph சுலபமாக இருந்தது. ஆனால் டல்லடிக்கும் மாணவர்கள் 2 ஐந்து மதிப்பெண் வினாக்களே செய்ய முடியும்.
2மதிப்பெண் 2 வினாக்கள் மட்டுமே சுலபம். ஆக மொத்தம் படிக்கின்ற மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது கடினம். இந்த வருடம் சென்டம் நிச்சயமாகக் குறையும். ஆக மொத்தம் கணித ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர்.
கிராமப்புற மாணவர்களை மனதில் வைக்காமல் வினாத்தாள் தயாரித்த அறிவு ஜீவியை மனமார வாழ்த்துவோம் என்கின்றனர் ஆசிரியர்கள் .
இன்று அதிகப்படியான மாணவ மாணவிகள் தேர்வு எழுதி விட்டு வெளியே வரும் போது கண்ணீருடன்தான் வந்தனராம்.



