December 6, 2025, 7:02 PM
26.8 C
Chennai

இன்றைய சிந்தனை… புரியும்படி பேச வேண்டும்..!

mic phone - 2025

தினசரி. காம்????  ????தினமும் ஒரு நற்சிந்தனை????

சிலர் பேசும் போது மத்தவங்களுக்குப் புரியுதா? புரியலையா? அப்படிங்கறதப் பத்தியெல்லாம் கவலைப்படாம படபடன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க.

இத்தகையப் பேச்சு கேட்பவருக்கு எரிச்சலைத் தரும். அதனால, அவங்க கேட்பதைப் பாதியிலேயே நிறுத்திடுவாங்க.

அதனால, மத்தவங்களுக்குப் புரியும்படி தெளிவாகப் பேசணும். அப்பதான் நமது பேச்சை விரும்பிக் கேட்பாங்க.

ஒரு தலைச்சிறந்த ஆன்மீக பேச்சாளர் இருந்தார்..பல பட்டங்கள் பெற்றவர்.. தத்துவங்களை கரைத்துக் குடித்தவர்..

அவரை ஒரு ஊரில் சொற்பொழிவு ஆற்ற கூப்பிட்டு இருந்தார்கள். பத்தாயிரம் பேர் வருவார்கள் என்றும் அவரிடம் சொல்லி இருந்தார்கள்.

அவரை அழைத்துண்டு செல்ல ஒரு குதிரைக்காரர் சென்றிருந்தார். அன்றைக்கு என்று பார்த்து ஊரில் பயங்கர மழை.

கூட்டம் ரத்து ஆகி விட்டது. எல்லோரும் கலைந்து சென்று விட்டார்கள். பேச்சாளர் வந்த போது அங்கே யாருமே இல்லை.

பேசறதுக்காக நிறையத் தயார் செய்து வந்த பேச்சாளருக்கு பெருத்த ஏமாற்றம்..

இருக்கிற குதிரைக்காரருக்காக மட்டும் பேசலாம் என்றால் மனசு இல்லை.’குதிரை வண்டிக்காரரை பார்த்து ”என்னப்பா செய்யலாம்?’னு கேட்டார்.

அய்யா! நான் குதிரைக்காரன்… எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.

புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும் தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க.

நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.

செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது அவருக்கு.. அந்தக் குதிரைக்காரருக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டு விட்டு, அவனுக்கு மட்டும் தன் பேச்சை ஆரம்பித்தார்.

தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியாச் சொல்லிப் பிரமாதப்படுத்தினார் அந்த பேச்சாளர்…

பேச்சு முடிந்தது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவரைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்…

அய்யா… நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாது.. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரை மட்டும் இருந்தால் , நான் அதுக்கு மட்டும் தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான்.

அவ்வளவு தான்… மறுபடியும் செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது அந்த பேச்சாளருக்கு..

ஆம்.,நண்பர்களே..,

இவங்க இன்னும் கொஞ்சம் பேச மாட்டாங்களா, என்ற உணர்வினை நமது பேச்சைக் கேட்பவருக்குத் தோற்றுவிக்க வேண்டும். அப்படிப் பேசுவது தான் நாம் பேசும் பேச்சின் வெற்றிக்கு அடிப்படை..

மற்றவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எதைச் சொன்னால் புரியுமோ, அதை மட்டும் சொன்னால் போதும். புரியாத, தேவை இல்லாத செய்திகளை மெனக்கெட்டு சொல்வது நம்மைத் தான் முட்டாளாக்கும்..

– அன்புடன் தோழர் கற்பகராஜ்

-கல்வி பாலம்???? ???? தினசரி. காம்????

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories