December 6, 2025, 5:12 PM
29.4 C
Chennai

நாட்டுக்கு நல்லது! காணாமலே போகும் கம்யூனிஸ்ட் கட்சிகள்!

kannur communist - 2025

எங்கே போனார்கள் இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா

கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ், மாநில கட்சிகளுடன் சேர்ந்து பாராளுமன்றத்தில் பேசியவர்கள் மற்றும் ஊடகங்களில் மற்றும் பத்திரிக்கைகளில் அதிக அளவில் பேசியவர்களை காணவில்லை…

ஏதாவது ஒரு மாநிலத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை.

விதிவிலக்கு தமிழகத்தில் மட்டும் திமுக கூட்டணியில் 4 இடங்கள் தரப்பட்டுள்ளது.

2004 ல் 60 எம்பிக்கள், ஆனால்
2014 ல் 10 எம்பிக்கள், மார்க்சிஸ்ட் 9 + இந்திய கம்யூனிஸ்ட் 1

2019 ல் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கும் இடம் தெரியவில்லை…

மேற்கு வங்கத்தில்… 30 ஆண்டுகளா ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி படு வீழ்ச்சி அடைந்து விட்டது…

7 அல்லது 8 இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்றும், அதே போல காங்கிரஸ் போட்டியிடும் சில இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுவது என்று சீதாராம் யெச்சூரி கடுமையாக முயன்று தோல்வி அடைந்தார். இவருடைய கோரிக்கையை ராகுல் காந்தி நிராகரித்து விட்டார்…

பீகாரில்… கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கூட்டணியில் தர முடியாது என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்து உள்ளார். மேலும் துக்கடே துக்கடே கன்கய்ய குமார் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு தர முடியாது என்று கூறியுள்ளார்.
கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில்… லட்சக்கணக்கில் விவசாயிகள் பேரணி நடத்தி மிகப்பெரிய போராட்டம் நடத்தியது கம்யூனிஸ்ட் கட்சிகள்…

ஒரு இடம் கூட இந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க முடியாது என்று சரத் பவார் கூறி விரட்டி விட்டார்…

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஹாஜரிபாக் தொகுதி கூட தரமுடியாது என்று காங்கிரஸ் கட்சி கையை விரித்து விட்டது.

உபியில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ், மாயாவதி, அகிலேஷ் கூறி விட்டார்கள்…

JNU பல்கலைக்கழக வளாகத்தில் காஷ்மீர் விடுதலை என்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாணவர்கள் சங்கம் போராட்டம் நடத்தியது. சீதாராம் யெச்சூரி, ராஜா, ராகுல் காந்தி எல்லாம் அங்கே வந்து ஆதரவு தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயாராக இல்லை…

கேரளா… கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி கோட்டையும் வீழ்ச்சி அடைந்து விட்டது. அராஜகம், படுகொலை மற்றும் ஐயப்பன் பக்தர்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதால், 3 அல்லது 4 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது என்ற சூழ்நிலையை மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்கி உள்ளது.

திரிபுராவில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் போய் விட்டது. அந்த நிலையை நோக்கி கேரள மார்க்சிஸ்ட் கட்சி பயணம் செய்கிறது…

பரப்பரப்பான நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எங்கே இருக்கிறார்கள் என்று யாராவது சொன்னால் தான் தெரியும் என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது…

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜாவை காணவில்லை…

எந்த ஊடகங்களிலும் இந்த இருவரையும் காணவில்லை… காணாமல் போய் விட்டது இந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்… இனிமேல் இவர்கள் சுய பரிசோதனை செய்ய கால அவகாசம் கூட இல்லை…!

இந்திய ஜனநாயக அரசியலில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது அடையாளத்தை முற்றிலுமாக தொலைத்து விட்டார்கள்….

  • உஷா சங்கர் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories