தன்னந்தனியா சைக்கிளில் நாடு சுற்றும் 24 வயசு இளம்பெண்; காரணம் என்ன தெரியுமா?!

asha malmia cycle tour - 2026

பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பான நாடு என்பதை எடுத்துச் சொல்லும் விதத்தில், தன்னந்தனியாக தாம் நாடு முழுதும் சைக்கிள் பயணம் செய்து வருவதாகக் கூறியுள்ளார் 24 வயது இளம்பெண் ஆஷா மால்மியா.  

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் நட்டாராம் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா மால்மியா என்கிற 24 வயது தேசிய மலையேற்ற வீராங்கணை,  இந்தியா முழுவதும் தனி ஒரு பெண்ணாக, இந்தியா பாதுகாப்பான நாடு என்பதை வலியுறுத்த சைக்கிள் பயணம் செய்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் அவரது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசம் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்ட தினத்தன்று , தனது பயணத்தைத் தொடங்கிய ஆஷா மால்மியா, குஜராத் மகாராஷ்டிரா ,கோவா, கர்நாடகா, கேரளா, உட்பட ஏழு மாநிலங்களை தனி ஒரு பெண்ணாக யாருடைய துணையும் இன்றி கடந்து, இன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வந்தடைந்தார்.

இவரது உயரிய எண்ணத்தை அறிந்து அவரைப் பாராட்டும் விதமாகவும் ஆதரிக்கும் நோக்கிலும், ராஜபாளையம் வருகை தந்த ஆஷா  மால்மியாவை, ராஜபாளையம் டி.எஸ்.பி. ப்ரீத்தி வரவேற்று உபசரித்து தனது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்தார். 

தான் கடந்து வந்த பாதைகள் குறித்து ஆஷா மால்மியா கூறியதாவது:

எனது நாடு பெண்களுக்கு பாதுகாப்பான நாடு என்பதை வலியுறுத்தவே இந்த அரிய முயற்சி, நான், கடந்து வந்த பாதைகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள்  காவல் துறையினர்,

வருவாய்த் துறையினர் பொதுமக்கள் உட்பட பலதரப்பட்ட மக்களும் நன்கு வரவேற்று உபசரித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது இந்தியா பாதுகாப்பான நாடு தான் என்பதை உறுதி செய்கிறது. எனது பயணத்தின் இறுதியில், எனது தாய்நாட்டைப் பற்றி தவறாக எண்ணியவர்களுக்கு என் மூலம் தகுந்த பதில் அளிக்கப்படும் என உணர்ச்சிபூர்வமாக கூறினார்.

இவரை வரவேற்று ஆதரவுகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த டிஎஸ்பி ப்ரீத்தி வாழ்த்துகள் கூறி வழியனுப்பி வைத்தார். மதுரை வழியாக தமிழகத்தை கடந்து ஓசூர் கர்நாடகா வழியாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆஷாமால்மியா தனது பயணத்தை தொடர்ந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories