December 8, 2025, 6:01 AM
22.7 C
Chennai

கூட்டணி குறித்த அண்ணாமலை கருத்து; ஹெச்.ராஜா அளித்த பதில்!

raja hariharan bjp - 2025

பாஜக தேசிய குழு உறுப்பினர் எச் ராஜா டெல்லி செல்லும் முன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்… அப்போது அவர், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பாஜக., நாடாளுமன்றக் குழுவிடம் உள்ளது என்றார்.

அதிமுகவுடன் கூட்டணி குறித்து அண்ணாமலை கூறிய கருத்திற்கு, எச். ராஜா, மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது…

அத்தைக்கு, மீசை முளைத்தால் சித்தப்பா ஆகையால் மீசை முளைக்கட்டும். அதுவரை அத்தை அத்தை தான்! பாஜகவில் கூட்டணி குறித்து எந்த முடிவுகளும் மாநிலத் தலைவரோ மற்ற நிர்வாகிகளும் அறிவிக்க முடியாது. ஆலோசனைகள், வழிமுறைகள், கருத்துக்களை பதிவு செய்யலாம். ஆனால் , கூட்டணி குறித்து முடிவு எடுப்பது, பாஜக.,வின் நாடாளுமன்ற குழு மட்டுமே.

கடந்த இரு நாட்களுக்கு முன் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளீர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறியது குறித்து செய்தி வந்துள்ளது . அது உண்மை அல்ல. பாஜக அதிமுக கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது, மாநில தலைவரோ மற்ற நிர்வாகிகளோ கிடையாது.

கூட்டணி குறித்து, வழிமுறைகள் மட்டுமே கருத்துக்களை பதிவு செய்ய முடியும்.
இது, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலத்திலும் அதற்கு முன்னர் சுந்தர் பண்டரி காலத்திலும் இருந்து நடைமுறையில் வந்துள்ளது. ஆகவே, மாநில கூட்டத்தில் கூறப்படும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு ,மத்திய குழு மட்டுமே விவாதித்து முடிவு செய்யப்படும் என, எச். ராஜா கூறினார்.

அதிமுக, பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, இது குறித்து மத்திய குழு தான் முடிவு செய்யும். அத்தைக்கு மீசை முளைத்தால் தான், சித்தப்பா அதுவரை அத்தை அத்தை தான் எனக் கூறினார்.

திருச்சியில், கே. என். நேரு, சிவா எம் பி இவர்களிடையே ஏற்பட்டது, தற்காலிக சமரசம். வெளிப்படையாகவே தெரிகிறது. மேலும், கத்தி ,கம்பு போன்றவற்றை கொண்டு மூத்தா நாடாளுமன்ற உறுப்பினர் சிவா அவர்களின் வீடுகளில் தாக்கியுள்ளனர். அத்துடன் காவல் நிலையத்தை தாக்கியுள்ளனர். ஆனால், இதுவரை யாருமே கைது செய்யப்படவில்லை. அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். என்பது உண்மை. மேலும், இது தற்காலிகமான சமரசமாகவே தெரிகிறது . உடைந்த பானை ஒட்டாது என்பது போல் உள்ளது.

அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனக் கூறிய கேள்விக்கு:

நான், சமீபத்தில் கோவை சென்று இருந்தேன் அங்கு எனது 40 ஆண்டு கால நண்பர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தில்லி செல்லும் முன், கோவையில் செ.மா. வேலுச்சாமி, பொள்ளாச்சி ஜெயராமனை சந்தித்தேன். அவர்களுக்கு, எந்த விதமான கருத்துகளும் இல்லை. ஒரு சில தலைவர்கள் பதில் கூறியிருக்கலாம். அதற்கு பதில் கூற முடியாது என, எச். ராஜா கூறினார.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories