குளுகுளு காற்று! ஜாலியான குளியல்! களைகட்டிய குற்றாலம்!

குற்றாலம் மெயின் அருவி ஜூலை 14 காலை நிலவரம்….

செங்கோட்டை: இன்று அதிகாலை முதல் குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக குற்றாலம் பகுதியில் கன மழை பெய்து வந்தது. செங்கோட்டை வனப் பகுதி, குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கன மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் நேற்று குற்றால மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை மிதமான அளவு நீர்வரத்து இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப் பட்டது.

சனி, ஞாயிறு என விடுமுறை தினம் என்பதால் நேற்று மாலை முதலே குற்றாலத்தில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (14-07-2018)

பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 95.8 அடி
நீர் வரத்து : 2234.26 கன அடி
வெளியேற்றம் : 904.75 கன அடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 110.17 அடி
நீர்வரத்து : NIL
கன அடி
வெளியேற்றம்: NIL

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 79.80 அடி
நீர் வரத்து : 518
கன அடி
வெளியேற்றம்:
675 கன அடி

மழை அளவு:

செங்கோட்டை: 27 மி.மீ
தென்காசி: 11 மி.மீ
பாபநாசம்: 8 மி.மீ
சேர்வலாறு: 2 மி.மீ
கடனா: 10 மி.மீ
ராமா நதி: 2 மி.மீ
கருப்பா நதி: 5 மி.மீ
குண்டாறு: 61 மி. மீ
அடவிநயினார்: 28 மி.மீ