
விடுதலை வீரர் “லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை…
வீரபாண்டிய கட்டபொம்மனின் விசுவாசமான தளபதியாய் “யது(யாதவ)குல சடக்குட்டிசேர்வை” விளங்கினார்
லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு பல இடங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனை வெற்றி அடையச் செய்துள்ளார்

சிங்கத்தாகுறிச்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைபோரில் லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் படை ஆங்கிலேயப்படையை விரட்டி அடித்தது
ஆங்கிலேய துரைகளின் தலைகளையை வெட்டி எறிந்தார் லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை
லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் வீரத்தை கண்டு மிரண்ட ஆங்கிலேயர்கள் நயவஞ்சகமாக எதிர்பாராத நேரத்தில் அவரின் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டனர்

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை மீது பேரன்பும்,பெரும் நம்பிக்கையும் கொண்ட வீரபாண்டியகட்டபொம்மன் மரணதருவாயில் தங்களுக்கு என்னவேண்டுமானாலும் தருகிறேன் என்று கேட்டதற்கு தாங்கள் தந்த “சேர்வை” பட்டமே போதும் என்று கட்டபொம்மன் மடியிலேயே வீரமரணம் அடைந்தார் சடக்குட்டிசேர்வை
லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் மனைவிகள் உடன்கட்டை ஏறிய இடம் இன்றும் அவர்களது பெயரில் காளியம்மாள் கோயிலாக மாலைக்காரிஅம்மன் என்று தெய்வமாக மக்கள் வழிபட்டு வருகிறார்கள்
லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்த மற்றொரு மாவீரர் தூங்கக்கோன்
லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் படையினர் வாழும் ஊர்களில் சில
1.லெக்கம்பட்டி, 2.மேல்மாந்தை, 3.நெடுங்குளம் அருகேயுள்ள கட்டாலங்குளம், 4.கடுகுசந்தை என்ற சத்திரம், 5.மாறந்தை, 6.சிறுகுடி, 7.கோட்டைநேந்தல், 8.கீழச்செல்வனூர், 9.வாகைக்குளம், 10.மணிவிளை, 11.கூரான்கோட்டை, 12.மாரியூர், 13.பாம்பன்
லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை பற்றிய கும்மிப்பாடல்
“பட்டான் பட்டான் சடக்குட்டி
படையில் பட்டான் சடக்குட்டி
நெற்றிமேல் குண்டு நேரேபட்டான் சடக்குட்டி
சிங்கத்தாகுறிச்சியை ஜெயங்கொண்ட சடக்குட்டி
நாடுவேண்டாம் நகரம்வேண்டாம் சடக்குட்டி
பாஞ்சாலங்குறிச்சியில் பட்டம் வாங்கிய சடக்குட்டி
சேர்வைபட்டம் மட்டும்போதும் சடக்குட்டி
சீறிப்பாய்ந்தான் சடக்குட்டி
சீமைத்துரையை வெட்டிவந்த சடக்குட்டி”
கட்டபொம்மனின் படைவீரனுக்குக்கூட அங்கீகாரம் கிடைத்துவிட்டது. ஆனால்
தளபதி சடக்குட்டிசேர்வையை போல பல மாவீரர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டு உள்ளனர்
கற்பனையாக பலர் புத்தகம் எழுதும் நிலையில் பலரால் மறைக்கப்பட்ட வரலாற்றை களஆய்வு மூலமாக ஏட்டில் ஏற்றியவர் வரலாற்றுஆய்வாளர் சுபாஷ்சேர்வை
கட்டபொம்மன் பிறந்தநாள், நினைவுநாளில் மாவீரர் சடக்குட்டிசேர்வையின் தியாகத்தை போற்றுவோம்…
-மதுரை கா.ராஜேஷ்கண்ணா



