
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையும் அவர் வந்த நேரத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரங்களையும் நம் நாட்டின் தரப்பில் இருந்து மட்டும் பார்க்காமல் அமெரிக்க தரப்பிலிருந்தும் பார்க்கிறேன்.
அமெரிக்க அரசாங்கத்தை பொறுத்தவரையில் அவர்கள் அதிபர் வேறு நாட்டிற்கு பயணம் செய்தால் உலகத்தில் இருக்கும் காட்சி மற்றும் காகித ஊடகங்கள் அனைத்திலும் அந்த பயணம் குறித்த செய்திகள் மாத்திரம் வருவதையே விரும்புவார்கள். அமெரிக்க அதிபர் எந்த நாட்டிற்கு பயணம் செய்யவிருக்கிறாரோ அதற்கு இரு மாதங்கள் முன்பிருந்தே அவர்கள் உளவு நிறுவனமான சிஐஏ அந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு குறித்து தினசரி அடிப்படையில் அரசாங்கத்திற்கு தகவல்கள் அனுப்பி கொண்டே இருப்பார்கள். அமெரிக்க அதிபர் இங்கு வந்து திரும்பி செல்லும் வரையிலும் இது தொடரும். ஒரு வேளை சூழ்நிலை சரியில்லை, பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கிறது, அல்லது இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு தொடர்பான செய்திகளை பின்னுக்கு தள்ளும் வகையில் போராட்டங்கள், வன்முறைகள் இருக்கிறது, இந்திய அரசாங்கம் அதை சரியாக கையாளவில்லை என்று அவர்கள் கருதினால் அமெரிக்க அதிபரின் வருகையே ரத்து செய்யப்பட்டிருக்கும்.
ஆனால் என்ன நடந்தது? கடந்த டிசம்பரில் இருந்தே நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவது உலகின் தலைசிறந்த உளவு நிறுவனமான சிஐஏ வுக்கு தெரியாமல் இருந்திருக்குமா? அதையும் தாண்டி ட்ரம்ப் இங்கே வந்து இந்தியாவுடன் சில பல ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டிருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் :
1. ராணா அயூப், பர்கா தத் போன்ற தேச விரோதிகளின் குடியுரிமை சட்டம் தொடர்பான புரளிகள் பெரும்பாலும் அமெரிக்காவில் வெளி வரும் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் தான் வெளியாகிறது. இதையெல்லாம் கடந்து மோடி தலைமையிலான மத்திய அரசு உண்மை நிலையை அமெரி்க்க அரசாங்கத்திற்கு புரிய வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.
2. இந்தியா சிறுபான்மை சமுதாயத்தை நன்றாக நடத்துவதாக ட்ரம்ப் வெளிப்படையாக பாராட்டியிருக்கிறார். இதற்கு முன் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழுகிறார்கள் என்று மோடிக்கு முன்பே சொன்னது குறிப்பிடத்தக்கது.
3. இதற்கு முன்னால் இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள் நம் நாட்டிற்கு சாதகமாக பேசுவது போல் பேசி காஷ்மீர் அல்லது வேறு விவகாரத்தில் போகிற போக்கில் கருத்து தெரிவிப்பார்கள். அத்துடன் இந்திய பயணம் முடிந்ததும் நேரே பாகிஸ்தானுக்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். ஆனால் ட்ரம்போ அது போல் எதுவும் தெரிவிக்காததுடன் சிஏஏ தொடர்பான போராட்டங்கள் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என்று தெளிவாக தெரிவித்ததுடன் நிற்காமல் பாகிஸ்தான் பயணத்தை தவிர்த்தார். இந்திய அரசை கண்டிப்பார் என்று எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் மற்றும் அவர்களின் ஏவல் ஊடகங்களுக்கு சரியான மூக்கறுப்பு செய்து விட்டார் ட்ரம்ப்.

4. பொதுவாக அமெரிக்க அதிபர் மட்டுமின்றி எந்த நாட்டு அதிபர் வந்தாலும் எதிர்க்கட்சி தலைவி சோனியாவை சந்திக்காமல் செல்ல மாட்டார்கள். ஆனால் ட்ரம்போ நாட்டில் கலவரங்களை தூண்டிவிடும் எதிர்க்கட்சி தலைவியை சந்திக்காமல் சென்றது நிச்சயம் சாதாரணமான விஷயம் அல்ல. அமெரிக்கா எந்த அளவுக்கு மோடி அரசுககு உறுதுணையாக இருக்கிறது என்பதை வெளிப்படையாக உணர்த்தும் செயல்.
5. எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாமிய பயங்கரவாதத்தை முறியடிக்க அமெரிக்கா இந்தியாவுக்கு துணை நிற்கும் என்று ட்ரம்ப் சொன்னது தான் ஹைலைட். இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் போராட்டங்களை வெளிப்படையாக எதிர்ப்பதுடன் இந்திய அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா வெளிப்படையாக பிரகடனப்படுத்தியது நிச்சயம் மோடி – ஜெய்சங்கர் – அஜித் டோவாலுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட வேண்டும்.
இறுதியாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இங்கே வந்திருப்பதால் துப்பாக்கி சூடு நடத்தியிருக்க கூடாதா என்று பல நண்பர்கள் கேட்கிறார்கள். அப்படி நடத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? உலக அளவில் அமெரிக்க அதிபரின் வருகை குறித்த செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு துப்பாக்கி சூடு, உயிர் பலி போன்றவை பிரதானமாக பேசப்பட்டு நம் நாட்டிற்கு வரும் முதலீடுகள் பலத்த அடி வாங்கியிருக்கும். இந்தியா வல்லரசாக வேண்டுமானால் அதற்கு அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளின் உதவி நிச்சயம் அவசியமான தேவை. இதை தெரிந்து கொண்ட விரோதிகள் அதை குலைப்பதற்கு பகீரத பிரயத்தனம் செய்தார்கள். அது வெற்றிகரமாக முறியடிக்கபபட்டு விட்டது.

ரத்தன் லால் அவர்களின் மரணம் நிச்சயம் துயரமானது தான். மத்திய அரசுக்கு பின்னடைவு தான். ஆனால் அதற்கு மத்திய அரசை மட்டும் குறை சொல்ல முடியாது. டெல்லி நாட்டாமை மற்றும் உச்ச நாட்டாமை தான் பொறுப்பேற்க வேண்டும். சில நண்பர்கள் காவிரி பிரச்சினையில் இருந்து டாஸ்மாக் வரையில் பல மாநில அரசுகள் எப்படி நாட்டாமையை மதிக்காமல் செயல்படுகிறார்களோ அதே போல் மோடி அரசால் செயல்பட முடியாதா என்று கேட்கிறார்கள்.
ஒரு மாநில அரசு நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் இருந்தால் அது உலக அளவில் மட்டுமில்லை அண்டை மாநிலத்தில் கூட செய்தியாக வராது. ஆனால் உலகமே உற்று நோக்கும் மத்திய அரசு அப்படி நடந்து கொண்டால் சர்வதேச அளவில் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மோடி ட்ரம்ப் திரும்பி செல்லும் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இப்போது அஜித் டோவல் உள்ளே நுழையவே எதிர் தரப்பின் கதறல்கள் வெளிப்படையாகவே தெரிகிறது.
மற்றவர்கள் கருத்து எப்படியோ, இதை விட பெட்டராக நிச்சயம் எந்த அரசாங்கமும் நிலைமையை கையாண்டிருக்க முடியாது என்பதே என் கருத்து.
- எஸ்.கே.கிருஷ்ணன்



