
கடந்த வியாழக்கிழமை 16/04/2020 அன்று மஹாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் கட்சின்சாலே என்ற கிராமத்தில் மும்பையிலிருந்து குஜராத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த சந்நியாசிகள் கல்பவிருக்ஷ கிரிமஹாராஜ் (70). சுஷில் கிரி மஹராஜ் (35), மற்றும் கார் ஓட்டுநர் நிலேஷ் தெல்கேடே(30) ஆகிய மூன்று பேரை 200 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று அடித்தே கொன்றது. காவல்துறையினரின் கண்ணெதிரிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரவு 9-9.30 மணிக்குள் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி அதிலிருந்தவர்களை இறக்கி கட்டைகளாலும், கற்களாலும் பல்வேறு ஆயுதங்களாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். 70 வயது முதியவர் மன்றாடி கேட்டுக்கொண்டும் அவரின் மீதான தாக்குதல் தொடர்ந்தது. இதற்கிடையில் வேறுபுறமிருந்து காவல்துறையினர் அங்கு வந்தனர். அங்கிருந்த வனசாவடியில் உட்கார வைக்க முயற்சித்த போதும் முடியவில்லை. மேலும் காவல் வாகனத்தில் அமர வைத்த போதும் கடுமையாக தாக்கிய போதும், கும்பலின் அராஜகத்தை தடுக்க முடியவில்லை. காலர்களின் கண்ணெதிரிலேயே அந்த கொலைகார கும்பல் மூவரையும் அடித்தே கொன்றது.
ஹிந்து சந்நியாசிகளின் இந்த படு கொலையில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் முழு சதி இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இது வரை 110 பேர் (9 சிறார் உட்பட) கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. சிறார்கள் காப்பகத்தில் உள்ளனர். அதில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களான ஜெய்ராம் தாக் பாவார், மகேஷ் சீதாராம் ராவதே, கணேஷ் தேவாஜி ராவ், ராமதாஸ் ரூபிஜி அசாரே மற்றும் சுனில் சோமயாஜி ராவாதே ஆகிய ஐவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) தீவிர உறுப்பினர்கள். இந்த தாக்குதல் தஹானு சட்டசபை (ST) தொகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து கட்டாய மதமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.பல்வேறு கிருஸ்துவ மிஷினரிகளின் துணையோடு பலகாலங்களாக அங்குள்ள மலைவாழ் மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள் மற்றும் வீடியோக்களில் அந்த கும்பலில் இருந்ததும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஷிராஸ் பல்சாரா என்பவரின் தலைமையில் இயங்கும் ‘கஷ்டகாரி’ என்ற என் ஜி ஓ, கிறிஸ்தவ மிஷனரிகளின் வேண்டுகோளின் படி கைது செய்யப்பட்ட அனைவரையும் பிணையில் எடுக்க முயன்று வருவதில் இருந்தே இதன் பின்னணியில் மிஷனரிகளின் பங்கு உள்ளது தெளிவாகிறது. இந்த சதி திட்டத்தின் மூளையாக செயல்பட்டது தஹானு சட்டசபை உறுப்பினரும், மஹாராஷ்டிரா மாநிலத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரே உறுப்பினருமான வினோத் நிக்கோலே தான் என்று உறுதியாக நம்பப்படுகிறது. தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும் இந்த கும்பலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில், அதுவும் இரவு 9 மணிக்கு நெடுஞ்சாலையில் கூட்டமாக அவ்வளவு பேர் கூடியிருந்தது ஏன்? எப்படி? சந்நியாசிகள் மூவர் வாகனத்தில் வருவது அவர்களுக்கு எப்படி தெரியும்? குறி வைத்து கொலைவெறி தாக்குதல் நடந்திருப்பது ஏன்? காவல்துறையினரால் செயல்பட முடியாதது ஏன்? 110 பேருக்கும் பிணை எடுக்க ஒரே அமைப்பு முயல்வது ஏன்? இதில் ‘இஸ்லாமியர்கள் உள்ளார்கள்’ என்று யாரும் சொல்லாத போதே மாநில அரசும், மற்ற கட்சிகளும் இஸ்லாமிய பெயர்கள் ஏது இல்லை என்று அவர்களாகவே முன் வந்து சொல்வதன் மர்மம் என்ன? இஸ்லாமிய மத சாயத்தை பூச முயல்வது ஏன்?

தாத்ரி, உன்னாவ், வெமுலா, கத்துவா. டில்லி, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களுக்காக தமிழகத்தில் பல மணி நேரங்கள், பல மாதங்கள் தொடர்ந்து விவாதம் செய்த தமிழ் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது முறையா? அந்த விவகாரங்களில் வாய் கிழிய பேசிய தமிழகத்தின் கம்யூனிஸ்டுகளும், முற்போக்குகளும் (?) , தி மு க மற்றும் அரசியல் விமர்சகர்களும் தற்போது காணாமல் போய் விட்டார்களே? இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை கேள்வி கேட்ட அர்னாப் கோஸ்வாமியின் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததை ஊடகவியலாளர்கள் கண்டிக்கவில்லையே?
சி பி ஐ இதை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு அமைப்புகளால் சொல்லப்படுகிற நிலையில் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் நடைபெற்று கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளின் கும்பல் வன்முறை கோரங்களின் மற்றொரு அத்தியாயம் தொடங்குகிறதா? என்ற கேள்வி மக்கள் முன் எழுந்திருக்கிறது.
இரு சந்நியாசிகள் கொல்லப்பட்டுளார்கள்கள். அதை மூடி மறைத்து கும்பல் வன்முறை என்று மூடி மறைக்க பார்க்கிறது அரசும், கம்யூனிஸ்டுகளும்.
சிகப்பு பயங்கரவாதத்தை வேரறுப்போம்.
கட்டுரையாளர்: நாராயணன் திருப்பதி (செய்தி தொடர்பாளர், பாஜக.,)



