கௌரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளர் பெங்களூருவில் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். இந்தியாவில் துப்பாக்கி கலாசாரம் பரவுவது அதுவும் தென்னிந்தியா போன்ற சற்றே அமைதி பிரதேசங்களாகக் கருதப் படும் இடங்களில் பரவுவது அபாயகரமான ஒன்று. கொலையாளிகள் கண்டு பிடிக்கப் பட்டு கடுமையான தண்டனை வழங்கப் பட வேண்டும்.
இறந்தவர் ஒரு நக்சல் ஆதரவாளர். கடுமையான இந்து வெறுப்பாளர். மோடி வெறுப்பாளர். எந்தவொரு பத்திரிகையாளரோ எழுத்தாளரோ, இந்து அல்லது மோடி வெறுப்பாளர்களாக இருப்பதில் எவருக்கும் ஆட்சேபணை ஏதும் இருக்க முடியாது. அது அவர்களது வக்கிர மன வெளிப்பாடுகள்.
பா ஜ க, மோடி வெறுப்பு எல்லாமே இன்றைய சூழலில் வக்கிர அரசியல் வயிற்றெரிச்சல், இந்திய – இந்து வெறுப்புகளின் விபரீதமான வெளிப்பாடுகளாகத் தான் தோன்றுகிறது. அப்படி எதிர்ப்பவர்களை காழ்ப்பும் குரோதமும் இந்திய வெறுப்பு எண்ணமும் ஊறிய மனநோயாளிகளாகவும் கருதி புறக்கணித்து விடலாம். எந்தவொரு நாட்டிலும் அரசியலிலும் இதைப் போன்றவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.
ஆனால் இப்படிப்பட்டவர்கள், நக்சல்கள், இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவாளர்களாக இருக்கும்போதுதான், நாட்டின் நலன் மீதான எண்ணம் அவர்களை வேறு பார்வையில் பார்க்கத் தோன்றுகிறது. நக்சல்கள் மட்டும் அல்ல இஸ்லாமிய பயங்கரவாதிகள் மட்டும் அல்ல அவர்களை எந்தவிதத்திலும் ஆதரிப்பவர்களும் நாகரீக உலகத்தில் புறக்கணிக்கப்படவேண்டியவர்கள். அவர்களை அரசாங்கமும் சட்டமும் ராணுவமும் தண்டிக்க வேண்டுமே தவிர, தனி நபர்கள் இல்லை!
இப்பொழுது இந்தப் பிணத்தை வைத்து இடதுசாரி எழுத்தாளர்களும் அறிவு ஜீவிகளும் பத்திரிகை உலக தரகர்களும் இன்னும் ஒரு பாட்டம் அழுது புலம்பி ஒப்பாரி வைத்து ஊளையிட்டு ஓலமிட்டு அரசியல் செய்யப் போகிறார்கள். ஒருவேளை, கொன்றது அந்தப் பெண்மணியின் சக நக்சல் காம்ரேடுகளாகவே இருந்தாலும்கூட இவர்கள் மோடியைத்தான் கொலைகாரன் என்று தங்கள் அழுக்குப் படிந்த கரங்களினால் எழுதப் போகிறார்கள். நாற்றம் எடுக்கும் வாய்களினால் ஊளையிடப் போகிறார்கள்.
மேலும் ஒரு கலபுர்கி அரசியலை செய்ய இந்த இடதுசாரி எழுத்தாளர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இப்போது ஒரு பிணம் வாகாக வந்து விழுந்திருக்கிறது. ஆனால் கொன்றவர்களை இவரைக் தண்டிக்க வேண்டியது அவசியம்.
இப்பொழுது இவரின் கொலைக்காக இடதுசாரிகளும் முற்போக்குகளும் ஒப்பாரி வைக்கிறார்கள். நாடு எங்கே போகிறது? ஐயோ அபாயம் ஐயோ இந்த்துவ பயங்கரவாதம் என்று ஊளையிடுகிறார்கள். அவர்களுக்கு நம் கேள்வி ஒன்றுதான்…
சென்ற சில வருடங்களாக பக்கத்து மாநிலமான கேரளத்தில் 200 பேர்களுக்கும் மேலாக இந்துக்கள் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப் பட்டார்களே. சமீபத்தில் மே வங்கத்தில் இந்துக்கள் எரித்துக் கொல்லப் பட்டார்களே. அப்பொழுதெல்லாம் எங்கே போயிருந்தது உங்களது மனித நேயம்?
அப்பொழுதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஒருவேளை உங்களுக்கும் செலக்டிவ் அம்னீஷியா நோய் தாக்கி விட்டதோ? அதெப்படி செலக்டிவாக அனுதாபம் பிறக்கிறது? எங்கேயாவது ஒரு நக்சலோ கம்னியுஸ்டோ கொல்லப் பட்டால் மட்டும் உங்களுக்கு எப்படி செலக்டிவாக ரத்தம் கொதிக்கிறது? இந்தியா எங்கே போகிறது என்று வெட்கம் இல்லாமல் கேட்கத் தோன்றுகிறது
அன்று கேரளத்திலும் மே வங்கத்திலும் கொல்லப் பட்டவர்களுக்காகவும் நீங்கள் கண்ணீர் சிந்தியிருந்தால், வருத்தப் பட்டிருந்தால், எங்கே போகிறது இந்தியா என்று கேட்டிருந்தால், இன்று உங்களை உண்மையான அக்கறையுள்ள நிஜமான மனிதாபிமானிகளாக ஏற்றுக் கொள்ளலாம். மாறாக ஏராளமான இந்திய வீரர்களையும் அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்த நக்சல் ஆதரவாளர்கள் சாகும் பொழுது மட்டும் உங்களுக்கு மனிதாபிமானம் பொங்கி வழியுமானால் நிச்சயமாக நீங்கள் போலி மனிதாபிமானிகள்தான்!
கட்டுரை: ச.திருமலை



