April 21, 2025, 5:03 PM
34.3 C
Chennai

தடுப்பூசிகள் கைவசம் இருந்தும் மாவட்டங்களுக்கு முறையாக விநியோகிக்காதது ஏன்?!

covid vaccine
covid vaccine sand art pic curtesy: Sudarshan Patnaik

தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றும், தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட குஜராத்திற்கு 10 விழுக்காடு அதிக தடுப்பூசி வழங்கியுள்ளது மத்திய அரசு என்றும் தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் கூறியுள்ளார்.

மக்கள் தொகையின் அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என்பதும், அந்தந்த மாநிலங்களில் பாதிக்கப்பட்ட தொற்றின் அடிப்படையிலேயே தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், அமைச்சர் அவர்கள் கூறுவது சரியென்றால், மக்கள் தொகை அடிப்படையில் பாஜக ஆட்சி உள்ள உத்தரப் பிரதேசத்திற்கு தானே அதிக அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் மகாராஷ்டிராவுக்கு தான் அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல் பாஜக ஆட்சி செய்யும் பீகாரில் அதிக மக்கள் தொகை உள்ள நிலையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானுக்கு தான் அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எங்கே பாரபட்சம் உள்ளது என்பதை அமைச்சர் விளக்க வேண்டும்.

ALSO READ:  பொன்முடியின் ஆபாச பேச்சு; அமைச்சராக தொடர சரி; கட்சியில் தொடர தவறாம்!

வயது மற்றும் அதிக பாதிப்புக்குள்ளாகும் நபர்களுக்கே தடுப்பூசிகளை விரைந்து செலுத்த வேண்டும் என்று இந்த விவகாரத்திற்கான அமைச்சகங்கள், மாநில அரசுகள், மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரே முடிவு செய்து அதற்கேற்ப ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் 18-44 வயதுக்குள்ளானோர் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், 45 வயதுக்கு மேலானோரே அதிக பாதிப்புக்கு உள்ளானார்கள் எனபதாலும், உயிரிழப்புகளில் 85 விழுக்காடு 45 வயதுக்கு மேற்பட்டோர் தான் என்பதையும், மாநிலங்களின் தடுப்பூசி செலுத்தும் சராசரி எண்ணிக்கை மற்றும் விரயமாகும் தடுப்பூசிகளை கணக்கிட்டே அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிகின்றன என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிந்திருப்பார் என்று எண்ணுகிறேன்.

மாநிலங்கள் நேரடியாக கொள்முதல் செய்து, செலுத்தப்படும் 18-44 வயதுக்குள்ளானோருக்கான தடுப்பூசிகள், மாநிலங்களில் அந்த வயதுக்குப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையிலேயே .வழங்கப்படுகிறது. அதே போல் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விலையினையும் நிர்ணயம் செய்துள்ளது மத்திய அரசு.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கேரளா போன்ற மாநிலங்கள் விரயத்தை தவிர்த்து வேகமாக அதிக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சுணக்கம் இருந்ததும், அதிக தடுப்பூசிகளை வீணடித்ததும், தடுப்பூசி குறித்த தவறான பிரச்சாரத்தை அன்றைய எதிர்க்கட்சிகள் செய்து மக்களை தயக்கமடைய செய்ததுமே, தமிழகம் தடுப்பூசிகளை செலுத்துவதில் பின்னடைவை சந்தித்க வைத்தது என்பதையும் அமைச்சர் புரிந்து கொண்டிருப்பார் என எண்ணுகிறேன்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

வருகிற ஜூன் 1 -15 வரை, தமிழகத்திற்கு 45 வயதுக்கு மேற்பட்டோருக்காக 6.55 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசும், 18-44 வயதுள்ளோருக்கு 11.52 லட்சம் தடுப்பூசிகளை, தடுப்பூசி நிறுவனங்களும் நேரடியாக அனுப்பவுள்ளன.

மேலும், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் இருப்பு இருந்தும் தடுப்பூசிக்கு பல மாவட்டங்களில் தட்டுப்பாடு நிலவுவது ஏன்? தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் ஏன்? முறையாக மாவட்டங்களுக்கு விநியோகிக்கப் படாதது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கு அமைச்சர் பதில் சொல்வாரா?

மத்திய அரசை குறைகூறுவதை நிறுத்தி விட்டு, மாவட்டங்களுக்கு முறையான விநியோகத்தை செய்து, தடுப்பூசிகளை விரைந்து செலுத்த மாண்புமிகு தமிழக சுகாதார துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

  • நாராயணன் திருப்பதி,
    (செய்தி தொடர்பாளர், பாஜக.,)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

காகித கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு!

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது காகிதக் கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு வெறும் கண்துடைப்பு வசனங்களை பேசவேண்டாம்

Entertainment News

Popular Categories