
வெண்மைப் புரட்சி செய்து உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பெருமையை கொண்டிருக்கும் இந்தியாவில் மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்யாமல் சோயா மூலம் சைவ பால் உற்பத்தி செய்ய வேண்டும் என குஜராத்தின் கூட்டுறவு அமைப்பான அமுல் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ள தீய சக்தியான பீட்டா அமைப்பின் சர்வாதிகார போக்கிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவின் பால்வளத்தை அழித்து, விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்து, இந்திய பால்வளத்தையும், அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தியாளர்களையும் இல்லாமல் செய்து விட துடிக்கும் தீய சக்தியான பீட்டா அமைப்பு இந்திய விவகாரங்களில் தலையிட ஒன்றிய அரசு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். அதனை மாநில அரசும் வலியுறுத்தி தமிழக பால் உற்பத்தியாளர்களை காத்திட தனி சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பீட்டாவிடமிருந்து மீட்டது போல் இந்திய பால்வளத்தை காத்திட பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு பொதுமக்கள் எப்போதும் துணை நிற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தி, விநியோகம், விற்பனையில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஜூன்-1 “உலக பால் தினம் நல் வாழ்த்துகள்”
- சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனத் தலைவர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.