December 5, 2025, 11:54 AM
26.3 C
Chennai

கார்ப்பரேட் ஆகிறது படைக்கலத் தொழிற்சாலை! மோதி அரசின் முக்கிய சீர்திருத்தம்!

modi 1 2
modi 1 2

மோதி அரசின் மேலும் ஒரு மிக முக்கியமான சீர்திருத்தம்!
கட்டுரை: செல்வ நாயகம் –

பிரிட்டிஷால் 1787இல் வெடிமருந்து தயாரிக்க (gunpowder factory) உருவாக்கப்பட்ட அரசின் படைக்கலத் தொழிற்சாலையில் (Ordnance Factory Board – OFB)  தற்சமயம் 81,500 பேர் பணியாற்றும் 41 நிறுவனங்களாக வளர்ந்துள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்பு உற்பத்தி துறையின் (Department of Defence Production ) கீழ் வரும் இந்த 230 ஆண்டுகளை கடந்த நிறுவனங்களை இப்போது மறுசீரமைத்து கார்ப்பரேட் நிறுவனமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

*** இது தனியார்மயமாக்கல் இல்லை. அரசின் நிறுவனமாகவே இருக்கும். ஆனால், இப்போதைய (ஐஏஎஸ் போன்றவர்களால் நடத்தப்படும்) நிர்வாகத்தை போல் அல்லாமல், நிர்வாக இயக்குனர்களால் (board of directors) நடத்தப்படும். பாதுகாப்பு உற்பத்தி துறையின் (Department of Defence Production ) பிடியில்லிருந்து விடுபடும். மேலும், எந்த அரசு ஊழியரும் பணியிலிருந்து நீக்கப்பட மாட்டார். ***

தற்போது: பாதுகாப்பு அமைச்சர் —>  பாதுகாப்பு உற்பத்தி துறை —> பாதுகாப்பு செயலர் —> OFB

இனி: பாதுகாப்பு அமைச்சர் —>  பாதுகாப்பு உற்பத்தி துறை —> பாதுகாப்பு செயலர் —> 7 கார்ப்பரேட் நிறுவன நிர்வாகிகள் —> 7 ஆலைகள்.

இந்த மாற்றத்தின் பொறுப்பு KPMG வசம் தரப்பட்டுள்ளது.

ordanance factory - 2025

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட், பாரத் எலக்டிரானிக்ஸ் லிமிடெட் போல,  OFB நிர்வாகம் மாற்றப்படும். 41 நிர்வாகங்கள் ஏழு நிறுவனங்களாக பிரிக்கப்படும். இவற்றின் தயாரிப்புகள் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

1, Ammunition and Explosives Group,
2, Vehicles Group
3, Weapons and Equipment Group
4, Troop Comfort Items Group
5, Ancillary Group
6, Opto-Electronics Group
7, Parachute Group

ஏனிந்த முடிவு?

டிகேஏ நாயர் குழு (2000), விஜய் கேல்க்கர் குழு (2006), வைஸ் அட்மிரல் ரமன் பூரி குழு (2016) என வெவ்வேறு குழுக்கள் இந்த (கார்ப்பரேட் அமைப்பு) பரிந்துரையை செய்து வந்தாலும், 2021இல் தான் இந்த முடிவை மோதி அரசு எடுத்துள்ளது.

இந்த பரிந்துரைக்கு காரணம்:

1, இந்திய இராணுவத்தின் ஒரே சப்ளையர் இந்த OFB என்பதால் அந்த ஏகபோக (Monopoly) அந்தஸ்து காரணமாக OFB தன்னிச்சையாக நடந்துகொண்டது.

2, OFBயின் தரமற்ற தயாரிப்புகள்.

3, காலதாமதம் (delayed timelines ).

4, தயாரிப்புகளில் எந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

5, 2019 சிஏஜி (CAG) அறிக்கையின் படி, தனக்கு இரானுவம் தந்த ஆர்டர்களில் வெறும் 49 சதவீத ஆர்டர்களையே OFB பூர்த்தி செய்தது. போதுமான தள்வாடங்கள் கிடைக்காததால் இராணுவம் அவதிக்குள்ளானது.

6, 2009 – 2010இல் இராணுவம் கொடுத்த ஆர்டர்களை இன்னும் பூர்த்தி செய்யவில்லை OFB.

7, “2014 – 2020 ஆகிய ஆறு ஆண்டுகளில் OFBக்கு கொடுத்த பணத்திற்கு 100 நடுத்தர பீரங்கி துப்பாக்கிகளை (medium artillery guns) வாங்கியிருக்கலாம்” என இராணுவம் புலம்பியிருக்கிறது. https://tinyurl.com/yfjz4c2c

“loss of Rs 960 crore to the exchequer due to poor quality OFB ammunition”  – https://tinyurl.com/v2t8yssx.

8, “OFB  தரும் தரமற்ற வெடிபொருட்களால் வாரத்துக்கு ஒரு விபத்து. 2014இல் மட்டும் 27 வீரர்கள் இந்த வெடிமருந்து விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். 159 வீரர்கள் ஊனமுற்றவர்களாக ஆகியிருக்கிறார்கள்” – இராணுவம்.

9, OFB ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ 5 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்குகிறது. மற்றும் OFBயை நடத்த ரூ 3 ஆயிரம் கோடி ஆண்டுக்கு.

10, சிறப்பு: அரசு OFBஐ கார்ப்பரேட் ஆக்க போகிறது என்றறிந்த தேசபக்த ஊழியர்கள் சென்ற அக்டோபர் 2020இல் ஸ்டிரைக் அறிவித்தனர் . இதில் என்ன சிறப்பு என்றால்… அப்போது லடாக் எல்லையில் இந்தியாவும் சீனாவும் மோதிக் கொண்டிருந்த காலம். “இந்திய இராணுவத்துக்கு  நாம் தான் ஒரே சப்ளையர். இராணுவம் வேறெங்கும் வாங்க முடியாத நிலை” என அறிந்தும் இந்த ஸ்டிரைக் அறிவித்தது OFBயின் 81 ஆயிரம் ஊழியர்கள் சங்கங்கள். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி அதை தள்ளிப்போட வைத்தது!!! ஒவ்வொரு முறையும் இம்மாதிரி ஸ்டிரைக் செய்து தன் காரியத்தை சாதித்துக் கொண்டுள்ளனர் என்கிறது இண்டியா டுடே @ https://tinyurl.com/v2t8yssx. இந்த இண்டியா டுடே கட்டுரையை படித்தால் இராணுவத்தின் வேதனையும் OFB அமைப்பின் நிர்வாக சீர்கேடுளும் தெரியவரும்.

OFB ஊழியர்கள் வேலை நிறுத்தம் / ஸ்டிரைக் அறிவித்தாலும், இந்த சீர்திருத்தத்திலிருந்து மத்திய அரசு பின்வாங்கப் போவதில்லை என்பது தெரிகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 7 கார்ப்பரேட்டுகள் உருவாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories