December 6, 2025, 3:27 AM
24.9 C
Chennai

ஒலிம்பிக் வீர வரலாறு: பேரோன் பியர் டி குபர்த்தீன்!

The Baron of Coubertin - 2025

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பேரோன் பியர் டி குபர்த்தீன்

நவீன ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தந்தை என அழைக்கப்படுபவர் பேரோன் பியர் டி குபர்த்தீன் என்கிற பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். நிலவுடமைச் சமுதாயத்தில் உயர் படிநிலையைச் சார்ந்த ஓர் ஆண்; பெருங்குடி மகன்; கோமான் பேரோன் என அழைக்கப்பட்டார். பின்னாளில் ஒரு குறிப்பிட்ட தொழிலின் அல்லது வாணிகத்தின் பெரும்பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெருந்தொழில் அதிபர் பேரோன் என அழைக்கப்பட்டார்.

நான் மயிலாடுதுறைக்கருகில் உள்ள செம்பொனார்கோயில் சம்பந்தம் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய உடற்பயிற்சி ஆசிரியர் ஜெகதீசன் என்பவர் எங்களுக்கு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொது அவர் சொன்ன பெயர் பேரோன் பியர் டி குபர்த்தீன். அன்றிலிருந்து பல நாட்களுக்கு நானும் என் வகுப்புத் தோழர்களும் விளையாட்டாக இந்தப் பெயரைச் சொல்லிகொண்டு அலைவோம்.

அதேபோல பிடிஃபைடஸ் என்பவன் ஒரு போரில் வெற்றிபெற்ற செய்தியைச் சொல்ல 26 மைல் 385 கெஜம் ஓடிவந்தானாம். அந்த தூரத்தையே இபோது மராத்தான் ஓட்டப் போட்டியின் தூரமாக வைத்துள்ளார்கள் என்ற ஒரு கதையையும் அவர் சொல்லுவார்.

சார்லஸ் பியர் டி ஃப்ரெடி, பரோன் டி கூபெர்டின் (1 ஜனவரி 1863-2 செப்டம்பர் 1937) ஒரு பிரெஞ்சு கல்வியாளர் மற்றும் வரலாற்றாசிரியர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிறுவனர் மற்றும் அதன் இரண்டாவது தலைவர். அவர் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

ஒரு பிரெஞ்சு பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த அவர் ஒரு கல்வியாளராகி, பரந்த அளவிலான பாடங்களைப் படித்தார். குறிப்பாக கல்வி மற்றும் வரலாறு. பாரிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அரசியல் ஆய்வுகள் கல்லூரியில் சட்டம் மற்றும் பொது விவகாரங்களில் பட்டம் பெற்றார். சயின்ஸ் போவில் தான் இவருக்கு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் யோசனை வந்தது.

பியர் டி கூபெர்டின் பதக்கம் (கூபெர்டின் பதக்கம் அல்லது விளையாட்டுத் திறனின் உண்மையான உள்ளுணர்வு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வழங்கிய விருது ஆகும்.

கிமு 8 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4 ஆம் நூற்றாண்டு வரை கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் நடைபெற்ற பண்டைய ஒலிம்பிக் போட்டிகளால் அவர் ஈர்க்கப்பட்டார். பரோன் பியர் டி கூபெர்டின் 1894இல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை (ஐஓசி) நிறுவினார், இது 1896ஆம் ஆண்டில் ஏதென்ஸில் முதல் நவீன விளையாட்டுக்களுக்கு வழிவகுத்தது. ஐஓசி ஒலிம்பிக்கின் ஆளும் குழுவாகும்.

olympics - 2025

அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் அமைப்பும், அதிகாரமும் ஒலிம்பிக் சார்டரால் வரையறுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒலிம்பிக் குழுவே ஒலிம்பிக் இயக்கத்தை நிர்வகித்து வருகிறது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன. ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய “இறந்தவர்களின் உரையாடல்” என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.

20-21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஊனமுற்றோருக்கான மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், பதின்ம வயதினருக்கான இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்பன தொடங்கப்பட்டமை இம் மாற்றங்களுட் சில. பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.

(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories