spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்நம்மிடையே... பாரதி பாடல்களின் தாக்கம்!

நம்மிடையே… பாரதி பாடல்களின் தாக்கம்!

- Advertisement -
subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதி பாடல்களின் தாக்கம்
– கே.ஜி.ராமலிங்கம் –

பாரதியார் பிறந்தது டிசம்பர் 11, தனது 11ஆம் வயதிலேயே கவிதை எழுதுவதை அவர் தொடங்கிவிட்டார், அவரது திறமையைக் கண்டு வியந்த எட்டயபுரத்தின் மன்னர், “பாரதி” என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார். பாரதி என்று சொல்லிற்கு சரசுவதி தேவியால் ஆசிர்வதிக்கப்பட்டபவர் என்று பொருள். அன்றிலிருந்து தான் சுப்பிரமணியம் என்று அழைக்கப்பட்டவர் சுப்ரமணிய பாரதியாக மாறினார்.

காலைப் பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி

நூலைப் பல பலவாகச் சமைத்து நொடிப்பொழுதும்
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன்
கோலை மனமெனும் நாட்டில் நிறுத்தல் குறியெனக்கே என்று
மூன்று வேண்டுதல்களை இந்தப் பாட்டில் வைக்கிறார் பாரதியார்.

பாரதி நான் தான் உன் நீலகண்டன் என்று சொன்னவுடன். டேய்…. நீலகண்டா… என்னடா… இது கோலம் என்று அவரைக்கட்டி அனைத்துக் கொண்டார்.
(விளைவு பல நாள் பட்டினி ஒரு நாள் பசி பொறுக்க முடியாமல் ஒரு நாள் திருவல்லிக்கேணியில் தங்கி இருந்த தனது நண்பர் பாரதியாரை பார்க்க வருகிறார், பசியால் வாடிப் போன
நீலகண்டனை பாரதியாருக்கு அடையாளம் தெரியவில்லை) .

பாரதி எனக்கு ரொம்ப பசிக்கிறது
ஒரு நாலனா( 25பைசா) கொடேன் சாப்பிட்டு நான்கு நாளாச்சு என்றார். இதை கேட்டவுடன் கண்கலங்கிய பாரதி அவருக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கிறார்

அப்போது பாரதியின் உள்ளத்தில் இருந்து வந்த உணர்ச்சிக் கரமான பாடல் தான் ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார்.

(அவர் தான் எருக்கஞ்சேரி நீலகண்ட பிரம்மச்சாரி நெல்லை கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்ற வழியாக 7/1/2வருடம் தண்டனை பெற்ற போது தான் இவர் பெயர் பிரபலமானது. விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், தமிழகத்தில் 20000 போராளிகளை ஒன்று திரட்டி பாரத மாதா சங்கம் என்ற புரட்சி இயக்த்தை தோற்றுவித்து போராடியவர். வாழ்வின் பெரும் பகுதியை இந்தியா,பாகிஸ்தான், மியான்மர், நாட்டுச்சிறைகளில் கழித்தவர். சிறையில் இருக்கும் போது அவருக்கு வயது 21 தான் சிறைவாசம் முடிந்து வெளியே வருகிறார். நாள் முழுவதும் சுதேசி பிரச்சாரம் அதற்கு கிடைத்ததோ பசியும் பட்டினியும் பசி தாங்க முடியாமல் இரவு நேரத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு இராப்பிச்சை எடுக்க ஆரம்பிக்கிறார்.

பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய நிலை தனக்கு வந்து விட்டது என்று நினைத்த அவர் அதையும் நிறுத்தி விட்டார். (தனது வாழ்வின் பிற்பகுதியில் வாழ்க்கையில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர், நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்து ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமிகளாக வாழ்ந்து தனது 88ஆவது வயதில் காலமானார்).

subramanya bharathi
subramanya bharathi

அமர கலா விலாசினி சபா என்ற ஒரு சபையை நிறுவிய வெ.சோமதேவ சர்மா அவர்கள் பாரதி மீது மிகப்பெரிய பக்தியும் அன்பும் அவருடன் நெருங்கிப் பழகியவர்.

இந்த சபையின் விழாக்களில் வ. உ. சிதம்பரனார், சத்தியமூர்த்தி, சுதேசமித்திரன் ஆசிரியர் ரங்கசாமி ஐயங்கார், சுப்பிரமணிய சிவா, சீனிவாச சாஸ்திரி முதலியவர்களெல்லாம் பேசி இருக்கிறார்கள்.

இந்த சபையில் 1921 ஜனவரி ஏழாம் தேதி பாரதியார் பேசியும், அவரது பாடல்களை பாடியும் சொற்பொழிவும் ஆற்றி அதில் “தேச சேவையில் ஈடுபட்டு நொந்தது மெலிந்திருக்கும் சுப்பிரமணிய சிவாவை ஆதரித்து பாரத மாதாவை அகமகிழச் செய்ய வேண்டும்” மேலும், சபையின் ஒரு நிகழ்ச்சியை பாரதியார் தலைமை வகித்த போது. அங்குள்ள மாணவர்களைக் கொண்டு சாரணர் வரவேற்பு அணிவகுப்பு கொடுக்கப்பட்டது அதைக் கண்டு பாரதியார் உள்ளம் பூரித்துப் போனார்.

வெள்ளிக்கிழமைகளில் பாரத மாதா உருவம் செய்து மலர் மாலைகள் சூட்டி பாரத கொடி வணக்கமும், பாரத மாதா வணக்கமும் இந்த சபையினர் செய்து வந்த போது, அதில் ஒரு தரம் பங்கேற்ற பாரதியார், ‘அச்சமில்லை அச்சமில்லை, ஜெய பேரிகை கொட்டடா’ முதலிய பாடல்களை உணர்ச்சி பொங்கி பாடினாராம்.

தாயின் மணிக்கொடிபாரீர்” அல்லது “வந்தே மாதரம் என்போம்” போன்ற பாடல்களில் சிறிது மாற்றம் செய்து பாருங்கள், அற்புதமான தேசிய கீதத்திற்கு ஒப்பானது, ஆனால் பாரதியோ வெள்ளையர் விரோதியாய் பாண்டிச்சேரியில் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என பாடிகொண்டிருந்தார், அவருக்கு வெள்ளையன் கொடுத்தது “தேச துரோகி” பட்டமும் சிறைத் தண்டனையும் தான்.

பாரதி இந்தியாவினை எவ்வளவு நேசித்தார் அல்லது இந்தியா பற்றி அவரின் கனவு என்ன? என்பதற்கு அவரின் பாடல்களே சாட்சி, வேறு எந்த கவிஞர்களிடம் இத்தகைய ஆளுமை கிடையாது என்றே சொல்லலாம்,

பாரதியின் பாடல்களில், “கணல்”, “உணர்ச்சி” அல்லது “எழுச்சி பிரவாகம்” இருப்பது தெரிய வரும்.

“முப்பது கோடி முகமுடையாள் – உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் – இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் – எனிற் சிந்தனை ஒன்றுடையாள்” என்ற கவிதையின் மூலமாக பாரத தேசம் பன்முகங்களைக் கொண்டிருந்தாலும், இந்த ஒட்டுமொத்த தேசத்தின் எண்ணம் ஒன்று தான் என்று நம் தேசத்தின் ஒற்றுமையை நூற்றாண்டுகளுக்கு முன்பே அழுத்திச் சொன்னவர்.

இன்றும் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என அவன் பாடியதே நடந்து கொண்டிருகின்றது.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மீடுறுத்தி வீதி சமைப்போம், வங்கத்தில் மீறி வரும் நீரின் மிசையால் வையத்து நாடுகளில் வளம் கொழிப்போம்…. இந்த கனவு (மகாநதி கோதாவரி இனைப்பு போன்ற திட்டங்கள் தற்போது நடைமுறையில் நடந்து கொண்டு இருக்கிறது).

பல மொழிகளில் புலமை பெற்றிருந்த பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியதன் மூலம் தமிழுக்கு நிகரான மொழி வேறு எதுவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி தமிழ் மொழியை பெருமைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

chellamma-bharathi
chellamma bharathi

படவுலகம் எடுத்த பாரதி விழா

படவுலகமே பாரதிக்கு விழா எடுத்தது தெரியுமா?
ஆச்சரியமாக இருக்கிறதா, ஆம்.
இது நடந்தது ஐம்பத்தெட்டாம் வருடம்.

படமெடுக்க உதவுபவர்கள் பாரதிக்கு விழா எடுக்கவும் உதவுவார்கள் என்று நம்பினேன், அதில் உறுதியாகவும் இருந்தேன் என்று நடிகர் வி கே ராமசாமி ஒரு பேட்டியில் கூறியுள்ளார் – நானும் ஏ. பி. நாகராஜன் மற்றும் நண்பர்களுடன் பல பெரிய மனிதர்களை நேரில் சென்று சந்தித்து பாரதி விழாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தோம்.

எஸ்.எஸ் வாசன், காமராஜர், மா. பொ. சி. பக்தவத்சலம், சி. சுப்பிரமணியம், சிவாஜி கணேசன் என்று நாங்கள் சந்தித்த அத்தனை பேரும் சிறப்பாக விழா நடைபெற எல்லாவித உதவிகளும் செய்வதாக வாக்களித்தார்கள்.

ஆரம்பித்தது நாங்கள் தான் என்றாலும் அந்த பாரதி விழா சரித்திர முக்கியம் வாய்ந்ததொரு நிகழ்ச்சியாக நடந்தேறியதற்கு மூல காரணம் மா. பொ. சி அவர்கள்தான். இதில் மா.பொ.சியின் பங்கு கணிசமான ஒன்று என்றே சொல்ல வேண்டும்.

எட்டயபுரத்தில் விழா, சென்னையில் இருந்து கலைஞர்களை ஏற்றிக் கொண்டு நூறு கார்கள் புறப்பட்டன. அந்த காட்சியை இப்போது நினைத்து பார்த்தாலும் மெய் சிலிர்க்க வைக்கிறது பாண்டி பஜாரிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கு புறப்பட்டது அந்த கார்களின் ஊர்வலம், ஒன்றன்பின் ஒன்றாக நூறு கார்கள் எங்கே படையெடுக்கின்றன என்று வழியில் பார்த்தவர்களெல்லாம் வியந்து நிற்க, ‘இருட்டிய வேளையில் நாங்கள் மதுரை தாண்டி இருந்தோம்’.

நல்ல இருட்டு, சொல்லி வைத்தாற்போல நூறு கார்களும் விருதுநகர் சாலையில் ஹெட் லைட்டுகளைப் போட, அந்த சாலையே ஒளிப் பிழம்பானது.

விருதுநகர் என் சொந்த ஊரல்லவா? தவிர நான் முன்பே அந்த ஊர் சேர்மன் வேம்பார் நாடார் என்பவருக்கு தகவல் கொடுத்திருந்ததால் ஊரே திரண்டு எங்களை வரவேற்றது.

“சுமா‌ர் இரண்டாயிரம் பேருக்கு சாப்பாடு ஏற்பாடு செய்யுங்கள்” என்று நான் போனில் சொல்லியிருந்தேன்.

“இது என்ன பிரமாதம்! ஜமாய்த்து விடலாம்” என்று அவர் சொன்ன போது எனக்கும் பெரிய வியப்பு ஏதுமில்லை, அவர் செய்து விடக் கூடியவர்தான்.

ஆனால் அவர் ஏற்பாடு செய்து இருந்ததை நேரில் பார்த்தபோது மயக்கம் வராத குறைதான்.

ஊரையே அடைத்துப் பெரிய பந்தல் போட்டு பாரதி பக்தர்களுக்கு மாபெரும் விருந்து செய்திருந்தார். சைவம், அசைவம் என தனித்தனியான பிரிவுகள், வந்திருந்த கலைஞர்கள் பிரமித்துப் போய் நிற்குமளவுக்கு உபசாரங்கள், ஏற்பாடுகள்.

டி. கே. சண்முகம் அண்ணாச்சி சொன்னார், “ஏம்பா ராமசாமி! எது வெஜிட்டேரியன் எது நான் வெஜிட்டேரியன்னே புரியலை எதை சாப்பிடறதுன்று ஒரே குழப்பமாக இருக்கு. இத்தனை ஐட்டம்களா?”

அவர் பிரமிப்பு காரணமில்லாததில்லை. வேம்பார் நாடாரின் ஏற்பாடுகள் அப்படி!

bharathi-neelakanda-brahmachari
bharathi neelakanda brahmachari

விருதுநகரில் நாங்கள் சாப்பிடுகிற நேரம் மட்டுமே தங்கினோம், உடனே புறப்பட்டு விட்டு மறுநாள் அதிகாலை எட்டயபுரத்தை அடைந்தோம்.

இரண்டு நாள் விழாவில் இல்லாத கோலாகலம் இல்லை! எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு கவிஞனுக்கு இன்று விழா எடுத்தால் சுமார் நூறு பேர் கூடுவார்கள்? அட ஆயிரம் பேர் என்று தான் வைத்துக்கொள்வோமே!

ஆனால் அன்று நாங்கள் நடத்திய பாரதி விழாவிற்கு கூடிய கூட்டம் என்ன தெரியுமா? சுமார் ஒன்றரை லட்சம் பேர்!

விழா தொடக்கத்தில் காருகுறிச்சி அருணாசலம் நாதஸ்வரத்தில் பாரதி பாடல்களை இசைத்த போது அத்தனை கூட்டமும் அமைதி காத்து ரசித்தது வியப்பான உண்மை! ஒரு சிறிய சப்தம்கூடக் கிடையாது

சிவாஜி கணேசன் வரவேற்க, சி. சுப்பிரமணியம் கொடியேற்ற, அன்றைய முதல்வர் காமராஜர் அவர்கள் தொடங்கி வைத்து பேச, டி. கே. சண்முகம் அண்ணாச்சி தொடங்கி ஏராளமான கலையுலக வித்தகர்கள் பேசியும் பாடியும் நடித்தும் மக்களை மகிழ்வித்தார்கள்.

சிவாஜி பாரதி வேடமணிந்து அன்று நடத்திய நாடகம் இன்னும் என் கண்களில் நிற்கிறது.

வ.உ.சி நாடகத்தில் நான் விஞ்ச் துரை வேடம் ஏற்று, “நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினார் கனல் மூட்டினாய்!” என்று பாரதியின் வ.உ.சி. விஞ்ச் உரையாடலை பேசி நடித்தபோது கரகோஷம் விண்ணைத்தொட்டது.

முதல்நாள் விழாவில் அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் கலந்து கொள்ள, மறுநாள் நடந்த விழா முழுக்க முழுக்க இலக்கிய விழாவாக நடைபெற்றது.

மு. வரதாசனார் தொடங்கி மா.பொ.சி.
கி.வா.ஜெகன்னாதன், பேராசிரியர் சீனீவாசராகவன், ப. ஜீவானந்தம், சின்ன அண்ணாமலை, புத்தனேரி சுப்ரமணியம் என்று ஏராளமான இலக்கியவாதிகள் பாரதியின் பல்வேறு கலைமுகங்களை அலசி ஆராய்ந்தார்கள்.

சினிமாக்காரர்கள் வெறும் வியாபாரிகள் என்று எண்ணிக் கொண்டிருந்த பலர் அன்று தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள் என்றால் அது மிகையில்லை.

மகாகவிக்கு அவர் பிறந்த மண்ணில் விழா எடுக்க தமிழ் திரை உலகமே திரண்டு வந்து உழைத்ததைப் பார்த்து வந்திருந்த அத்தனை மக்களும் வியந்து போனார்கள்!

அன்றைய தினத்தில் (1958) அந்த விழாவுக்கு ருபாய் இரண்டு லட்சம் செலவானது. நானும் ஏ.பி.என்னும் கணிசமான தொகையை ஏற்க மீதியை அன்பர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்றே விழா நடத்தினோம்.

அந்தப் பாரதி விழாவில் தான் முதல்முதலாக சென்னை மாகாணத்துக்கு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் தீர்மானமும் எழுந்தது!

அப்போது அந்த தீர்மானம் நடைபெறாமல் போனாலும் பின்னாளில் நிறைவேறியது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe