spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்… உண்மைகள்! (பகுதி- 24)

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்… உண்மைகள்! (பகுதி- 24)

- Advertisement -

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“Judiciary is introduced by Britishers to India – நீதித்துறை பிரிட்டிஷார் அளித்த வரம்!” – இது நிச்சயாமாக ஒரு பச்சைப் பொய்

இன்றைய ‘லா’ படிப்பில் ஆரம்பப் பாடங்களில் நீதி அமைப்பு லத்தீன், கிரேக்க நாடுகள் மூலம் நம் தேசத்திற்கு வந்தது என்றும் பிரிட்டிஷ் அரசர்களால் தான் நீதிமன்றங்கள் நம் தேசத்தில் உருவாகி நீதித்துறை வளர்ந்தது என்றும் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார்கள். இது நிச்சயாமாக பச்சைப் பொய்!

பாரத தேசத்தில் பன்னெடுங்காலமாக நீதி அமைப்பு இருந்துவருகிறது. தர்மபீடம் என்ற பெயரில் நீதிபதிகள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தார்கள். இரு கட்சிக்காரகளிடமும் பரிச்சயம் உள்ள உள்ளூர் பெரியவர்கள் பஞ்சாயத்துக்கு இரு தரப்பு வாதிகளையும் வரச் செய்து உண்மைகளை ஆராய்ந்து நியாயம் கூறும் அமைப்பு பரவலாக இருந்தது.

இதனை அடியோடு நாசம் செய்தனர் பிரிட்டிஷார். பாரதீய நீதி அமைப்பு மனிதர்களிடம் இருக்கும் நீதியையும் நேர்மைப் பண்பையும் வளர்க்கும் விதமாக இருந்தது. நீதிபதிகள் தனிப்பட்ட விதத்தில் மாறுவேடங்களில் பயணித்து உண்மைகளைத் தெரிந்து கொண்டு தீர்ப்பு வழங்கினர்.

தர்மத்தோடு கூடிய நீதியும், பச்சாதாபம் ஏற்படுத்தக் கூடிய விரைவான தீர்ப்பும் நம் தேசத்தின் தனிப்பட்ட சிறப்புகள்.

பிரிட்டிஷார் நம் மேல் திணித்த நீதி அமைப்பு இதற்கு மாறாக இருந்தது. நீதித்துறை மேல் வெறுப்பு வரும்படியும் நம்பிக்கை இழக்கும்படியும் இருந்த தீர்ப்புகள் தேசபக்தர்களுக்கு மன வேதனை அளித்தன. மொழியோ கலாசாரமோ புரியாமல் வாதப் பிரதிவாதங்களைப் புரிந்து கொள்ளாமல் அளிக்கும் தீர்ப்பாக மேலைநாட்டு நியாய அமைப்பு இருந்தது.

தீர்ப்பு சொலும் முன் நீதிபதிகள் சில விஷயங்களை நினைவில் கொள்ளவேண்டும் என்கிறது பாரதிய நியாய சாஸ்திரம்.
*இயல்பான நியாயக் கண்ணோட்டம்.
*பாரபட்சம்மில்லாமல் இருப்பது.
*அச்சமில்லாமல் தீர்ப்பளிப்பது.
*ஒத்திப்போடுவது பெருங்குற்றம். உடனுக்குடன் தீர்ப்பு வழங்குவது அவசியம்.
*குற்றவாளிக்கு பச்சாதாபம் ஏற்படும் வகையில் தீர்ப்பு விளங்க வேண்டும்.
*நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை கெடக் கூடாது. சாதாரண ஜனங்கள் திருப்தியடையும்படி பண்பட்ட தீர்ப்பாக இருக்க வேண்டும்.
*பலவீனமானவர்களுக்கு மனவுறுதி அளிக்கும் விதமாக தீர்ப்பு இருக்க வேண்டும்.

பிரிடிஷார் அமல்செய்த நீதி அமைப்பில் மேற்சொன்ன குணங்களோ பயன்களோ சிறிதும் இல்லை. அவர்கள் செய்த அக்கிரமங்களுக்கு நீதிமன்றம் என்ற முகமூடியை அணிவித்து பலரைத் தூக்குக் கம்பம் ஏற்றிக் கொன்றனர்.

தமிழ்நாடு வந்தவாசி என்ற நகரின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த கல்வெட்டில் நியாயம் தர்மம் விஷயத்தில் பண்டைய பாரதம் எத்தனை உன்னத நிலையில் இருந்தது என்பதை தெரிவிக்கும் சம்பவம் செதுக்கப்ட்டுள்ளது.

ஒரு கிராமாத்திற்கு ஒரு பெண் நீதிபதியாக இருந்தாள். தவறு செய்த ஒரு மனிதரை விசாரித்து தண்டனை விதித்தாள் அந்தப் பெண் நீதிபதி. கிராமத்தின் நடுவில் இருந்த ஒரு கோவில் வளாகத்தையும் அங்கிருந்த மாட்டுத் தொழுத்தையும் ஒரு மாத காலம் கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்ற உத்தரவே அவள் அளித்த தீர்ப்பு. இது ஒரு சிறப்பு என்றால் அந்தக் குற்றவாளி அவளுடைய கணவன் என்பது மற்றொரு சிறப்பு. மறுநாள் தண்டனை பெற்ற மனிதன் கோவிலுக்குச் சென்ற போது அவனுடைய மனைவி அங்கிருந்த மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். கணவன் ஆச்சர்யமடைந்தான். “பஞ்சாயத்தில் நான் நீதிபதி! வீட்டில் உங்கள் மனைவி!” என்றாள் அந்தப் பெண்.


மாதவராவு பேஷ்வாவின் ஆஸ்தானத்தில் ‘ராம சாஸ்த்ரி பிரபுனே’ என்பவர் புகழ்பெற்ற நீதிபதியாக பணிபுரிந்தார். அண்ணின் மகன் ஸ்தானத்தில் அரசாண்டு கொண்டிருந்த மாதவராவுக்கு தன் ஆட்சியை நிரந்தரம் செய்து கொள்ள வேண்டும் என்ற தீய எண்ணம் ஏற்பட்டது. “துர்புத்தியோடு அண்ணன் மகனைக் கொல்வதற்கு சதி செய்கிறான்” என்ற செய்தி நீதிபதிக்கு நம்பிக்கையாகத் தெரிந்தது. தைரியசாலியான ராம சாஸ்திரி அந்த அரசனுக்கு மரண தண்டனை விதித்தார். இது ஒரு சாகசத்தோடு கூறிய தீர்ப்பாக வரலாற்றில் நிலைத்துவிட்டது.


Source- ருஷிபீடம் நவம்பர், 2018


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe