December 5, 2025, 7:02 PM
26.7 C
Chennai

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்: விளைவுகள்… உண்மைகள்! (பகுதி-29)

vantherikaL vambupracharam - 2025

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“Punctuality is absent among Indians – நேரம் தவறாமை இந்தியர்களுக்குத் தெரியாது!”

உலக நாடுகளில் இந்தியர்களுக்கு மட்டுமே நல்ல நேரம் பார்ப்பது என்ற விஞ்ஞான முறைமை உள்ளது. ஒரு பணியை நன்கு தேர்ந்தெடுத்த நேரத்தில் கச்சிதமாக மணி, நிமிடம், வினாடியோடு கூட செய்து முடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாம். நம்மைப் பார்த்து முதலில் வியந்து, பின்னர் ஏளனம் செய்வதற்காக Indian Punctuality என்ற சொல்லை பயன்படுத்தினர் வந்தேறிகள்.

திருமணம், புதுமனை புகுவிழா போன்ற விழாக்களில் முகூர்த்த நேரத்தை தவறாமல் கடைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் நம்மை விட யாரும் இல்லை.

அகந்தை கொண்ட பிரிட்டிஷார் தம் தாழ்வுமனப்பான்மையை காட்டிக் கொள்ள விரும்பாமல் இவ்விதமான ஆட்சேபணைகளை கூறத் தொடங்கினர். போகப்போக நமக்கு நேரம் தவறாமை குறித்த அலட்சியம் இருப்பதாகவும் இந்தியர்கள் எதையும் சரியான நேரத்திற்குத் தொடங்க மாட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்தனர்.

மனிதன் எப்போது உறக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும்? எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும்? என்பது பற்றி ரிஷிகள் படைத்த சாஸ்திரங்கள் கூறும் அறிவியல் நமக்கு உள்ளது.

“ப்ராஹ்மீ முஹூர்தே உத்திஷ்டே ஸ்வஸ்தோ ரக்ஷார்தமாயுஷம்”

பொருள்: சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் – என்பது ஆயுர்வேத நூல்களில் முதல் பக்கத்திலேயே உள்ள அறிவுரை!

சோம்பலை அருகில்கூட நெருங்கவிடாத பாரதியர்களுக்கு நேரம் தவறாமை தெரியாதென்று அபவாதம் சுமத்துவது அசட்டுத்தனம்.

நித்தியம் செய்யும் சந்தியாவந்தனத்தில் அர்க்கியத்தை சரியான நேரத்தில் செய்யாவிட்டால் பிராயச்சித்தம் செய்து கொள்ளும் பண்பாடு நமக்குள்ளது. சரியான நேரத்தில் எதையும் செய்ய வேண்டும் என்று போதிக்கின்ற ஸ்லோகங்கள் சமஸ்கிருத மொழியில் பல உள்ளன.

மகாபாரதத்தில் உள்ள இந்த ஸ்லோகப் பகுதி நமக்குள்ள நேரம் தவறாமையை தெரிவிக்கிறது…

ஸ்வ: கார்ய மத்ய குர்வீத
பூர்வாஹ்ணே சாபராஹ்ணிகம் !

பொருள்: நாளை செய்யலாமென்ற பணியை இன்றே செய்ய வேண்டும். மதியம் செய்யலாம் என்று எண்ணிய வேலையை காலையே செய்ய வேண்டும்.

ஹிதோபதேசம் கூறும் இந்த நற்சொல் நாம் நேரத்தை எத்தனை மதிப்புள்ளதாக கணக்கிடுகிறோம் என்பதை தெரிவிக்கிறது…

க்ஷணஸ: கணஸ்ஸ்சைவ வித்யாம் அர்தஞ்ச சாதயேத் !

பொருள்: நேரத்தை வீணடிக்காமல் யாரிருப்பார்கள்… சுப முகூர்த்தம் வைத்துக் கொண்டு நேர விரயம் இன்றி வேலைகளைச் செய்யும் பாரதியர்களை விட?.

வந்தேறிகள் நம் மேல் செய்த நகைச்சுவையை நாமும் நம்மைப் பற்றி நினைத்துக் கொள்வது தாழ்வு மனப்பான்மையின் உச்சம்!

Source- ருஷிபீடம் மாத இதழ், மார்ச், 2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories