December 6, 2025, 1:38 PM
29 C
Chennai

நம்பிக்கை என்பதே மூடத்தனம்! இதில் தனியாக எங்கே வந்தது மூடநம்பிக்கை என்பது?

kannadasan - 2025

கண்ணாதாசனின் அனுபவ மொழிகளில் இருந்து…

எத்தனையோ பேர் மூட நம்பிக்கை மூடநம்பிக்கை என்று நம்பிக்கையை மூட வைப்பார்கள். உண்மையில் நம்பிக்கை என்பதே பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று அல்லவா? நடக்கும், நடக்காமல் போகும் இருக்கும் இல்லாமல் போகலாம் என உறுதியாக, அறுதியிட்டுச் சொல்ல முடியாத உண்மைப் பொருளாக நம்பிக்கை எனும் எண்ணம் இருக்கும்போது, மூட நம்பிக்கை மட்டும் எப்படி பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்க முடியும்?! நம்பிக்கையும், மூட நம்பிக்கையும் இரண்டுமே பகுத்தறிவுக்கு ஒவ்வாததுதான்!

இது என் முடிவான எண்ணம் என்று சொல்லவில்லை…. நம் கவியரசர் காட்டும் சிந்தனையும் அதுவே!

நம்பிக்கை Vs மூடநம்பிக்கை

ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் உண்டு. அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை… எதுவும் கிடையாது.

சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம்.

அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?

நாட்டு மக்கள் எல்லாரையுமே நாத்திகர்களாக ஆக்கிவிட முடியும் என்று நம்பித்தான் பெரியார் பிரசாரம் செய்தார். அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது? திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அந்தக் காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தார்கள். அதன் கதி என்ன?

நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்படுவது. அப்படி நடக்காமலும் போய்விடலாம். அப்போது அது மூடத்தனமாகிவிடுகிறது. ஆண்டவனை நம்புவதிலும், அதே நிலைதான். அது தோல்வியுற்றால் மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்.

ஆகவே, நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அதில் ஆஸ்திகன் மட்டுமென்ன தனி ஜாதி! இதுவரை எந்த நம்பிக்கை எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது? ஆனால், நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே மேற்கொள்கிறார்கள்? அதிலே மனத்துக்கு ஒரு சாந்தி.

தெய்வ நம்பிக்கை, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே ஏற்பட்டது. விஞ்ஞான நம்பிக்கையைப் போல் ஒரு கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி பெறுவதுதான் தெய்வ நம்பிக்கை.

“ஒரு சூத்திரதாரியின் கைப்பொம்மைகள் நாம்” என்பது மறுக்க முடியாதது. மரணம் என்ற ஒன்று, அதைத் தினசரி வலியுறுத்துகிறது. இவ்வளவுக்குப் பிறகும், தெய்வ நம்பிக்கையைச் சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்களானால், “நான் ஒரு மூடன்’ என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.

முட்டாள்தனத்தில் இருக்கிற நிம்மதி கெட்டிக்காரத்தனத்தில் இல்லை. உடம்பிலோ எல்லா நோயும் இருந்தும் “ஒன்றுமே இல்லை’ என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே இருக்கிறான். ஒரு நோயும் இல்லாமலேயே ஒவ்வொரு மயிர்க்காலையும் பார்த்து, “இது அதுவாக இருக்குமோ? என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி, நித்திய நோயாளியாகச் சாகிறான்.

“சுடு’ என்று சொன்னவுடனேயே யாரைச் சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு வெற்றி தேடித் தந்திருக்கின்றன. அந்த நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால்… பகுத்தறிவு மிஞ்சும்… நாடு மிஞ்சாது!

போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்துக் கண்ணன் அதைத்தான் சொன்னான்.

“போர்’ என்று வந்த பின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது’ என்றான். கடைசியில் கண்ணன் மீது மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தைத் தூக்கினான். முடிவு வெற்றியாகக் கனிந்தது.

கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை வலியுறுத்துகிறது. பக்தியோகம், தியானத்தை வலியுறுத்துகிறது. கடமையும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது. தியானமும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது.

“மனம் உண்டானால் வழி உண்டு’ என்பது பெரியோர் வாக்கு. அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும். தியான தர்மத்துக்கும் பொருந்தும். ஆகவே, தெய்வ நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்வதைப் பற்றி நான் வருந்தவில்லை. இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப்போகிறார்கள்” என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!

(கவிஞர் கண்ணதாசனின் கடைசிப் பக்கத்திலிருந்து..)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories