spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்உலக அரசியல் சதுரங்கத்தில்... 2024ன் அதி முக்கியத்துவம்! என்ன செய்யப் போகிறோம்?

உலக அரசியல் சதுரங்கத்தில்… 2024ன் அதி முக்கியத்துவம்! என்ன செய்யப் போகிறோம்?

- Advertisement -
modi in g20

2024 ஆம் ஆண்டு உலக அளவிலான அரசியல் சதுரங்கத்தில் தேர்தல் ஜுரம் பிடிக்க ஆரம்பித்தது இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி, ரஷ்யா, சீனா – தைவான், நம் இந்திய தேசத்திற்கு என இந்த பட்டியலில் உள்ள தேசங்களின் தேர்தல் முடிவுகள் நாளைய உலக அரசியல் ஆடுகளத்தையே மாற்றும் வல்லமை கொண்டது.

தைவான் தேர்தலை மையமாக வைத்தே, அங்கு பெய்ஜிங் இரவு பகலாக உழைத்து கொண்டு இருக்கிறது. ஜிங் பிங்கே அமெரிக்கா வரை சென்று பைடனோடு பேரம் பேசி விட்டு வந்திருக்கிறார் கடந்த வாரம். சுற்றுப் பயண தீர்மானம் என்னவோ இரண்டு நாட்கள் தான். ஆனால் ஜோபைடனே இரண்டு நாட்கள் முன்னதாகவே அழைத்து விருந்து உபசாரம் செய்தார். அங்கே என்ன நடந்தது, என்ன பெயர்ந்தது என்ற பேரங்கள் எல்லாம் பின்னர் மெதுமெதுவாய் வெளியே கசியும்.

மத்தியக் கிழக்கு அரசியலில் ஆர்வம் காட்டி வரும் அமெரிக்கா, அதன் பிடி தளர்ந்து வருவதை உணர்ந்து கொண்டு உள்ள சூழ்நிலையில்தான், சீன அதிபரின் இந்த பயணம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. காரணம் இந்தியாவின் செயல் திறன் அப்படி. அமெரிக்கா, சீனாவின் மத்தியக் கிழக்கு பொருளாதார நகர்வுகளை பார்த்து ஓரம் போக, அந்த இடத்தில் சீன ஆக்ரமிப்பு ஏற்படாமல் தடுக்கும் பணிகளில் இந்தியா ஜரூராக இறங்கி வேலை பார்த்து வருகிறது. இது மிகப் பெரிய ஆடு புலி ஆட்டம். பெய்ஜிங்கை காட்டிலும் புதுதில்லி வேகமாக இருக்கிறது என்கிறார்கள்

விடாமல் ஆட்டம் காட்டி வரும் சபஹார் துறைமுக பணிகளில் யாருமே எதிர்பாராத வண்ணம் ஆர்மீனியாவை இந்தியா உள்ளே கொண்டு வந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இதனால், துருக்கி அதிபர் ஹெர்துவான் கதி கலங்கி கருவிக்கொண்டே இருக்கிறார். ஏனெனில் இவருக்கு இது ஆகாத தேசம். ஆர்மீனியா, அஜர்பைஜான் விஷயத்தில் இவர் அஜர்பைஜான் பக்கம் நின்று ஆர்மீனியர்களை துரத்தி அடித்தார். இன்றளவும் அஜர்பைஜான் பிடித்து எடுத்த பகுதிகள் மீட்டெடுக்கப் படவில்லை. அது, ரஷ்யா கையைப் பிசைந்து நின்ற தருணம். இந்த விஷயத்தில் இந்தியாவோ, செமத்தியாக திருப்பி அடித்து இருக்கிறது.

துருக்கியின் வாடகை ராணுவத்தினரை, ஹமாஸ் போராளிக் குழுக்களை, ஹிஸ்புல்லாக்களை மறைமுகமாக ஆதரித்து வரும் சீனாவிற்கு இது பேரதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். இவர்களின் திரைமறைவு ஆதரவைக் கொண்டே மத்திய கிழக்கு நாடுகளில் தனது பொருளாதார திட்டமிடலை வைத்திருக்கிறது பெய்ஜிங். இதனை தந்திரமாக உடைத்து இருக்கிறது இந்தியா.

உதாரணமாக ஆர்மீனியா, ரஷ்யா ஆதரவு பெற்ற நாடு. உலக அளவில் இந்தியாவிடம் இருந்து ராணுவ சாதனங்களைக் கொள்முதல் செய்யும் நாடு. இதன் எதிர் முகாமில் உள்ளது அஜர்பைஜான். இதனை துருக்கி தூக்கிப் பிடிக்கிறது. இதற்கு அமெரிக்க ஆதரவு உண்டு. இந்த இடத்தில் சீனா மறைமுகமாக ஆதரிக்கும் ஹமாஸ், முழுக்க முழுக்க அமெரிக்காவை எதிர்க்கவே கட்டமைக்கப்பட்ட பயங்கரவாத இயக்கம் என்பது உலக அளவில் பேசப்படும் ஒன்று. இவர்களுக்கு உண்டான நிதியின் பெரும் பங்கு, அரபு உலக கச்சா எண்ணெய் வர்த்தக விற்பனை மூலமே கனகச்சிதமாக செல்கிறது. சமீபத்திய நாட்களில் இவர்கள் இஸ்ரேலை தீவிரமாக எதிர்க்கிறார்கள்!

சரியாகச் சொல்வதென்றால், இப்படி அமெரிக்கா இஸ்ரேல் என ஒட்டுமொத்தமாகக் குடைச்சல் கொடுக்கும் சீனா, துருக்கி மறைமுக ஆதரவு பெற்ற இவர்களை, நம் இந்திய தரப்பு ஒரு மார்க்கமாக செக் வைத்து இருக்கிறது. இவர்கள் அனைவரும் ரஷ்ய ஆதரவு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது இதில் உள்ள நுட்பமான, சாதுர்யமான விஷயம். இதில் சொல்லும்படியான விஷயமே, அரபு உலகம் இதனை வரவேற்கிறது என்பதுதான்.

இது ஒருபுறம் இருக்க, ரஷ்யாவில் நடைபெற உள்ள தேர்தலில் விளாடிமிர் புடினை எதிர்த்து ஒருவர் களம் இறங்க இருக்கிறார். அவரது பெயர் இகோர் கிர்க்ஙின். ரஷ்ய முன்னாள் FSB ராணுவ அதிகாரி. டொனட்ஸ் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளை உள்ளடக்கிய டொன்பாஸின் பகுதியில பணியாற்றியவர். தற்போதைய உக்ரைன்- ரஷ்யா மோதலில் நேரடியாகக் களத்தில் இருந்து செயல்பட்டவர். ரஷ்ய வாடகை ராணுவத்தினரான வாக்னர் க்ரூப் மற்றும் சேச்சன் ஆர்மி படையினருக்கு நன்கு பரிச்சயமானவர்.1970 களில் பிறந்த இவர் புடினை விட தாம் நன்கு செயல்பட முடியும் என்கிறார். அதனாலேயே அவரை எதிர்த்து களமாட இருப்பதாகவும் சொல்கிறார்.

இது கிட்டத்தட்ட ஒரு முன்னாள் KGB உளவாளியை ஒரு முன்னாள் FSB ராணுவ அதிகாரி எதிர்கொள்ள இருக்கிறார். இதில் கவனிக்கதக்க விஷயம், இவருக்கு சீன விவகாரம் வேப்பங்காய் என்பதுதான்! அதேநேரம் உக்ரைன் விஷயத்தில் இந்திய நிலைப்பாட்டை சிலாகித்தவர். இவர் மீது மேற்கு ஐரோப்பிய சாயம் இருக்கிறது என்பதையும் மறக்கக் கூடாது. எனினும் ஒருவகையில் சரியாக காய் நகர்த்தினால், இவரால் விளாடிமிர் புடினை தீவிரமாக எதிர்க்க முடியும் என்கிறார்கள். அதாவது புடினை சற்றே அசைத்து பார்க்கலாம் என்கிறார்கள். தற்போதைக்கு அவ்வளவு தான் முடியும் இந்த விஷயத்தில்!

அடுத்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் அமெரிக்க தேர்தல் நடக்க இருக்கிறது. சரியாக ஓர் ஆண்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அங்கு அதிபர் தேர்தலில் பங்கு பெற இருக்கிறார்கள். ஏற்கெனவே தற்போது ஆட்சியில் உள்ள, அதாவது ஜோபைடன் சார்ந்த டெமாக்ரெடிக் கட்சியின் கமலா ஹாரிஸ் துணை அதிபர் என்கிற முக்கிய பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண்மணியாக அறியப் படும் வேளையில், தற்போது நேரடியாக அதிபர் தேர்தலில் பங்கு பெற ஏற்பாடுகள் நடக்கிறது. இவர்களில் இளம் வயதினரான விவேக் ராமசாமி மிகவும் கவனிக்க தக்க நபராக அங்கு வலம் வருகிறார். இவர் குடியரசுக் கட்சி வேட்பாளர்.

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சார்ந்த ரிபப்ளிக் (குடியரசு) கட்சியில் நிக்கி ஹாலி என்கிற சௌத் கரோலினா முன்னாள் மாகாண கவர்னர் களம் இறங்கி இருக்கிறார். அதாவது டிரம்பை போட்டி இடாமல் செய்ய அவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர் போட்டியிடாமல் போனால் முன்னாள் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பாம்பியோ அதிபராக களம் காண, இவர் துணை அதிபர் தேர்தலில் பங்கு கொள்ளக் கூடும் என்கிறார்கள்.

தற்போதைக்கு நம் முன் உள்ள இவற்றைக் கொண்டு ஒரு அனுமானத்துக்கு வரலாமே தவிர, கள நிலவரம் சூடு பிடிக்கும் நேரத்தில்தான் இது குறித்து தீவிரமாக ஆராய முடியும்! அவரவர் தங்கள் பங்கிற்கு உழைத்துக் கொண்டு இருக்க, நம் ஆளும் தரப்போ, இப்போது அயராது உழைத்து கொண்டுக் இருக்கிறார்கள் நாட்டின் பொருளாதார நலன்களுக்காக!

கட்டுரை: – ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe