சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (52): அஜ்கல் ந்யாய:

samskrita nyaya - 2026

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 52
தெலுங்கில்: பி.எஸ். சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன்

அஜ்கல் (அச்+ஹல்=அஜ்கல்) ந்யாய:
அச் – உயிரெழுத்துக்கள். ஹல் – மெய்யெழுத்துக்கள்

இலக்கணத்தில் ஒரு கருத்தைக் கொண்டு ஒரு மகத்தான செய்தியை வெளியிடுவதற்கு ரிஷிகள் அளித்த நியாம் இந்த அஜ்கல் நியாயம்.

மொழி விஞ்ஞானம், இலக்கணம் ஆகியவற்றில் அறிமுகம் உள்ளவர்களுக்கு அ– ச், ஹ- ல் (அச், ஹல்) என்பது பழக்கமானதே. 

‘அச், ஹல்’ என்றால் என்ன? உயிரெழுத்துக்களை சமஸ்கிருதத்தில் ‘ஸ்வரம்’ என்பார்கள். ஸ்வரத்தை விளக்கும் சாஸ்திரம் இவ்வாறு கூறுகிறது. “ஸ்வரம் ராஜதே இதி ஸ்வர:”. தனக்குத் தானாகவே மலர்பவை. சுயமாக ஒளி வீசுபவை ‘அச்’ அதாவது உயிரெழுத்துக்கள்.

‘ஹல்’ என்னும் மெய்யெழுத்துக்கள் ‘ஸ்வ’ இல்லாதவை. அதாவது தனியாக வாழமுடியாதவை. ‘அச்’ என்னும் உயிரெழுத்தைச் சார்ந்திருந்தால்தான் ‘ஹல்’ என்னும் மெய்யெழுத்துக்கு முழுமை கிடைக்கும். 

சுலோகம்:

“ஏகாதினோsபி ராஜந்தே ஸாரஸத்த்வா: ‘ஸ்வரா’ இவ
‘வ்யஞ்ஜனா’னீவ நி:சத்த்வா: பரேஷாமனுகாமின:”

இதில் உவமான அலங்காரத்தைக் கொண்டு ‘அச்’ களையும், ‘ஹல்’ களையும் மிக சமத்காரமாக ஒப்பிட்டுள்ளார்கள். 

அறிவில் இரு விதம்:

உலகில் இரண்டு வித மனிதர்கள் இருப்பார்கள். (ஸ்வ) சுயபலம் கொண்டவர்கள் ஒருவகை.. இவர்கள் சுய புத்தியால் வழிகாட்டிக் கொண்டு முன்னே செல்வார்கள். பிறருக்கு உதவும் திறன் கொண்டவர்கள். இந்த முதல் ரகம் மனிதர்கள் தலைவர்களாக பிரகாசிப்பார்கள். இவர்களை உயிரெழுத்துக்களோடு ஒப்பிட்டார்கள்.

மற்றொரு வித மனிதர்கள் வலிமையற்றவர்கள். இவர்கள் சுதந்திரமில்லாதவர்கள். தம் சொந்தக் காலில் நிற்க இயலாதவர்கள். இவர்களுக்குப் பிறருடைய ஆதரவு தேவை. பிறரைச் சார்ந்திருப்பார்கள். சுய புத்தி இல்லாத இவர்கள் தலைவர்களாக முடியாது. பிறர் எழுதிக் கொடுத்ததைப் படிப்பார்கள். அதில் இருக்கும் கருத்தையும் புரிந்து கொள்ள இவர்களால் இயலாது. யாராவது கேள்வி கேட்டால் தடுமாறுவார்கள். பிறருடைய புத்தியைச் சார்ந்திருக்கும் இவர்களை ‘ஹல்’ எனப்படும் மெய்யெழுத்துக்களோடு மேற்கண்ட சுலோகம் ஒப்பிடுகிறது.

இரு வேறு மனிதர்களின் இயல்பில் எதனால் இந்த வேறுபாடு? படைப்பில் எந்த அநியாயமும் இல்லை. கடவுளை நிந்திக்க வேண்டாம். சுய பலத்தை முயற்சித்துப் பெற வேண்டும். தேசமானாலும் தனிமனிதர் ஆனாலும் இயல்பாகத் தனக்குள்ள சக்தியைப்  பிறரோடு பகிர்ந்து கொண்டால்தான் மதிப்புடையவர் ஆக முடியும் என்பதே இந்த நியாயம் கூறும் செய்தி.

‘அச்’ என்னும் உயிரெழுத்தில் இருக்கும் வேதாந்தம்:

வேதாந்தத்தின்படியும் ‘அஜ்கல்’ நியாயத்தை விளக்கியுள்ளனர் அறிஞர்கள். இதில் உயிரெழுத்துக்களை உயிர், சைதன்யம். ஆத்மா ஆகியவற்றோடு ஒப்பிட்டனர். மெய்யெழுத்துக்களை (சரீரம்) உடலோடு ஒப்பிட்டார்கள்.

ஆத்ம சைதன்யம் உள்ள உடலை ‘உயிரினம்’ என்பார்கள் ஆத்மா பறந்து போய்விட்டால், மீதி உள்ளது சைதன்யமற்ற வெறும் உடல் சவமே. ‘அஜ்கல்’ நியாயத்தில் கூறுவது என்னவென்றால், உயிரெழுத்து இல்லாவிட்டால் மெய்யெழுத்தை உச்சரிக்க முடியாது. அதே போல் பரமாத்மா இல்லாவிட்டால் ஜீவன் இல்லை. உயிரெழுத்து இருந்தால்தான் மெய்யெழுத்து ஒரு நிலையான எழுத்தாகப் பயன்படும். பரமாத்மாவை அறிந்தவருக்கு ஞானோதயம் பிறக்கிறது. ஞானி எவ்விதமாக சுதந்திரமானவராக ஆவாரோ அதே போல் ஸ்வரங்கள் (உயிரெழுத்துக்கள்) சுதந்திரமானவை என்று கூறுகிறது இந்த நியாயம்.

அரசியலிலும் இத்தகைய திண்மையை உள்ளீடாகப் பெற்றவரே தலைவராக ஒளிவீசுவார்கள். மக்களின் பாராட்டைப் பெறுவார்கள். அர்ஜுனன் சுய முயற்சியால் திறமையை வளர்த்துக் கொண்டான்.  சிவனை மகிழ்வுறச் செய்து பாசுபத அஸ்திரத்தைப் பெற்று விஜயனானான். ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளும் அவற்றின் திறமையால் உயிரெழுத்துக்களைப் போல சுதந்திரமானவை. பயங்கரவாதிகளின் நாடான பாகிஸ்தான், மெய்யெழுத்துக்களைப் போல எப்போதும் பிறரைச் சார்ந்தே இருக்கிறது.

மொழி விஞ்ஞானம்:

சிவபெருமான் வாசித்த டமருவில் இருந்து தோன்றிய ‘மாஹேஸ்வர சூத்திரங்கள்’ எனப்படும் பதினான்கில் இருந்து வந்த ஒலிகளை ‘அச்’, ‘ஹல்’ என்று பிரித்தார்கள்.

அச் (உயிரெழுத்துக்கள்):

அ இ உ ண்
று அலு க்
ஏ ஓ ஜ்
ஐ ஔ ச்

இவ்விதம் ‘அ முதல் ச் வரை’ இருக்கும் எழுத்துக்கள் சுதந்திரமான உயிரெழுத்துக்கள்.

ஹல் (மெய்யெழுத்துக்கள்):

ஹ ய வ ர ட்
ல ண்
(இன்ன பிற)

“அச்” என்னும் உயிரெழுத்தோடு சத்சங்கம்:

உயிரெழுத்தோடு சேர்ந்த மெய்யெழுத்துக்கள் ஒரு உறுதியான வடிவத்தைப் பெற்று எழுத்தாக சுதந்திரம் அடைகின்றன. இந்த சத்சங்கத்தில் உயிரெழுத்து என்னும் குருவின் சந்நிதியில் ஞானியாக மாறிய அறிவு பெறும் ஆர்வமுள்ள ஜிஞ்ஞாசியான மனிதன் சுதந்திரமாக நிலைபெறுகிறான். ‘அஜ்கல்’ நியாயத்திற்கு ஞானியின் சத்சங்கத்தால் பெற்ற  பயன் என்பது ஒரு உதாரணம்.

உயிரெழுத்தில் பரமாத்மா:

உயிரெழுத்துக்களை அடைக்கலம் கொடுக்கும் பரமாத்மாவாகக் கருதலாம். நாம் வழிபடும் தெய்வங்கள், குருமார்கள் உயிரெழுத்து போல ஆதாரமானவர்கள். ஜீவர்கள் என்ற மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்துக்களோடு சேரும்போது, பக்தானகவும் ஞானியாகவும்   மாறுவது சிறப்பு.

‘அச்’ என்னும் சுயம் பிரகாசனான சூரியன், ‘ஹல்’ என்னும் சந்திரன் முதலான கிரங்களுக்கு ஆதாரமாக உள்ளான். சூரியனோடு சேர்ந்திருந்தால்தான் பிறவற்றுக்கு இருப்பு இருக்கும். அப்போதுதான் அது சூரிய குடும்பமாக மலரும். 

அதேபோல் சமர்த்தனான யஜமானன் இருந்தால்தான் குடும்பம் அழகாக விளங்கும். வீடு என்றால் சம்பாதிப்பவர், அவரைச் சாந்திருப்பவர் என்று இருவர் இருப்பர். அதேபோல் கல்வி நிலையங்கள், வியாபார அமைப்புகள், சேவை சங்கங்கள் போன்றவற்றை சாமர்த்தியமாக நிர்வாகம் செய்யவேண்டுமென்றால் உயிரெழுத்து போன்ற மனிதர்கள் முக்கிய இடத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் வெற்றியை சாதிக்க முடியும். அப்படியின்றி அனைவரும் மெய்யெழுத்தாக இருந்தால் அந்த நிறுவனம் ‘பூச நட்சத்திரத்தில் பிறந்து மக நட்சத்திரத்தில் காணாமல் போய்விடும்’. (அற்பாயுளில் மறைந்து விடும்).   

உயிரெழுத்துக்களில் கணிதம்:

உயிரெழுத்துக்கள் எண்கள். மெய்யெழுத்துக்கள் பூஜ்யம். பூஜ்ஜியத்திற்கு மதிப்பு இல்லை. எண்களோடு சேர்ந்தால்தான் மதிப்பு அதிகரிக்கும்.

உயிரெழுத்துக்களில் தலைமைப் பண்பு:

திறமையான தலைமையும், திடமான அமைச்சரவையும் அரசியல் கட்சிகளுக்கு உயிரெழுத்து போன்றவை. இவர்களைச் சார்ந்திருக்கும் செயல் வீரர்களும் பிறரும் மெய்யெழுத்து போன்றவர்கள். இவற்றின் விகிதம் சரியாக இருந்தால் கட்சியின் எதிர்காலம் நன்றாக இருக்கும். ஒரு கட்சியில் தலைமைக் குறைபாடும், மெய்யெழுத்துக் கூட்டம் போன்ற அங்கத்தினர்களும் இருந்தால் அந்தக் கட்சி நாளடைவில் குலைந்து போகும். கடந்த கால வைபவங்களையே சொல்லிக் கொண்டு காலம் கழிக்க வேண்டி வரும். பேராசையும் சுயநலமும் கொண்ட, சாமர்த்தியமற்ற அசத்துகளான மெய்யெழுத்துக்களை மக்களின் மீது ஏவிவிடக் கூடாது என்ற கருத்தை இந்த நியாயம் தெரிவிக்கிறது.

உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் இணைந்தால்தான் அட்சரங்கள் உருவாகும். சாமர்த்தியமான சரியான தலைவர்கள் இருந்தல்தாம் வெற்றி கிட்டும். இதுவே ‘அஜ்கல்’ நியாயம் அளிக்கும் செய்தி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories