December 6, 2025, 11:58 AM
26.8 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் – பகுதி 109

gandhifeatured1 - 2025

ஆப்தே தன் வாழ்நாளில் வெடிகுண்டு வீசி அறிந்தவரில்லை.

உண்மையில் அந்த கையெறி குண்டை எறிவதற்கு அந்த STRIKER ஐ நிலையில் வைத்திருந்த பின்னை பற்களால் இழுக்க வேண்டும் என்றுதான் இன்னும் நம்பிக் கொண்டிருந்தார்.

அவர் வாழ்க்கையில் ரிவால்வரை யாவது பயன்படுத்தியிருப்பாரா என்பதும் சந்தேகமே.

ஆனால் அந்த சிமெண்ட் ஜாலியின் துவாரத்தின் வழியாக,ரிவால்வரை பயன்படுத்தி சுட முடியும்,கையெறி குண்டை வீச முடியும் என்று நம்பினார்.

அதன் பிறகு அவர் திகம்பர் பாட்கேயையும்,ஷங்கர் கிஷ்டய்யாவையும் பணியாளர்கள் QUARTERS பக்கம் அழைத்து வந்து,அந்த சிமெண்ட் ஜாலி இருக்கும் ரூமைக் காட்டினார்.ஜாலி,அறைக்குள் அடுத்த பக்கத்தில் இருந்தது.

பாட்கே செய்ய வேண்டியதெல்லாம்,புகைப்படம் எடுக்கப் போவதாக கூறிக் கொண்டு,அறைக்குள் நுழைந்து காந்தியை,

சிமெண்ட் ஜாலியின் துவாரத்தின் வழியாக சுட்டு விட்டு,வெடிகுண்டையும் கூட்டத்தின் மீது எறிந்து விட்டு வந்து விட வேண்டும் என்று ஆப்தே அவரிடம் கூறினார்.

ஆப்தேயோ,பாட்கேயோ,அந்த அறைக்குள் நுழைந்து அதன் உள் அமைப்பை பார்க்கவேயில்லை.

ஆனால் வெளியேயிருந்து பார்த்ததே போதும் என்று திருப்திப்பட்டுக் கொண்டு விட்டார்கள்.

ஷங்கர் கிஷ்டய்யாவை பொறுத்தவரை நடப்பது எதுவுமே அவருக்கு புரியவில்லை.

ஆப்தே பாட்கேயிடம் மராத்தியில்,சற்று குரலை தாழ்த்திப் பேசிக் கொண்டிருந்தார்.

அது அவருக்கு சுத்தமாகப் புரியவில்லை.

அதை விட முக்கியமாக அந்த பிர்லா தோட்ட வளாகத்திற்கு அவர் ஏன் அழைத்து வரப்பட்டிருக்கிறார்,அந்த நாளின் பிற்பகுதியில் அவர் என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதும் அவருக்குத் தெரியவில்லை,புரியவில்லை.

ஒரு ’கமாண்டோ பிரிவு ‘க்கு ஒரு தைரியமான வேலைக்கு, சரியான அறிவுறுத்தல்கள் கொடுத்து விட்ட திருப்தியில் ஆப்தே அந்த இருவரையும் அழைத்துக் கொண்டு ஹிந்து மஹா சபா பவனுக்கு திரும்பினார்.

அவர்கள் பவனுக்கு திரும்பும் போது,காலை 11 மணியாகி விட்டது.

கோபால் கோட்ஸே மட்டும் குளித்து விட்டு தயாராகக் காத்திருந்தார்.

கார்கரேயும்,மதன்லால் பஹ்வாவும்,சாப்பிட வெளியே சென்றிருந்தனர்.

அந்த எழுவர் குழுவில் மூன்று பேர் இல்லாத நிலையிலும் ( நாதுராம் தலைவலியின் காரணமாக ஹோட்டல் அறையிலேயே இருந்தது நினைவிருக்கலாம் ),மற்ற நால்வருக்கும் பயிற்சியளிக்கும் பொருட்டு அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே புறப்பட்டார் ஆப்தே.

’’ நாம் இப்போது காட்டுப்பகுதிக்கு செல்லப் போகிறோம் ; அங்கு கொண்டு வந்திருக்கும் இரண்டு ரிவால்வர்களையும் பயன்படுத்திப் பார்க்கப் போகிறோம் ‘’ என்று கூறினார்.

அங்கு அந்த சுடும் பயிற்சியின் போது நடந்தவையெல்லாம் வெறும் கேலிக்கூத்தாக இருந்தது.

சென்ற நால்வரும் தாங்கள் தாங்கள் ஏற்றிருந்த பாத்திரங்கள் பற்றி சீரியஸாகத்தான் இருந்தார்கள்.

ஆனால்…

பின்னாளில் பாட்கே கூறியபடி ..

‘’ காட்டை அடைந்தவுடன், கோபால் கோட்ஸேயை அவருடைய ரிவால்வரை எடுக்கும்படி ஆப்தே சொன்னார். அதை எடுத்து CATCH ஐ அழுத்தும்போது,ரிவால்வர் CHAMBER வெளியே வரவில்லை ‘’.

கோபால் கோட்ஸே கொண்டு வந்திருந்த அந்த .38 WEBLEY SCOTT ரிவால்வர்,நான்கு ஆண்டுகளாக மண்ணிலேயே புதையுண்டு கிடந்ததால் துருப்பிடித்தும்,அதற்குள் மண் புகுந்தும் இருந்தது.

ஆப்தே,பாட்கேயை அவர் கொண்டு வந்திருந்த ரிவால்வரை எடுக்கச் சொன்னார்.

எப்போதும் இது போன்ற ‘ குற்றப் பொருட்களை ‘ பாட்கே தன் வசம் வைத்திருப்பதில்லை.அதற்கென்றே அவர் கூட வைத்திருந்த ஷங்கர் கிஷ்டய்யாவை ரிவால்வரை எடுக்கும்படி கூறினார்.

ஆப்தே ரிவால்வரில்,பாட்கே கொண்டு வந்திருந்த நான்கு தோட்டாக்களையும் LOAD செய்து அதை ஷங்கர் கிஷ்டய்யாவிடம் கொடுத்து,அங்கிருந்த ஒரு மரத்தை நோக்கிச் சுடச் சொல்லிக் கூறினார்.

தனக்கு சுடத் தெரியாது என ஷங்கர் கிஷ்டய்யா கூற,ரிவால்வரிலிருந்த TRIGGER ஐ காட்டி ‘’ அதை அழுத்து ‘’ என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து ஷங்கர் கிஷ்டய்யா சுட தோட்டா மரம் வரை செல்லாமல் இடையிலேயே விழுந்தது.

பாட்கேயுடைய ரிவால்வர் .32 வகையை சேர்ந்தது.ரிவால்வர் நன்றாகத்தான் இருந்தது.ஆனால் அந்த தோட்டாக்கள் அந்த ரிவால்வருக்கு பொருந்தி வருபவை இல்லை.

அது தவறான CALIBER ஐ சேர்ந்தது,அல்லது பழுதடைந்த ஒன்று.

பாட்கே கொண்டு வந்திருந்த ரிவால்வர் பயனற்றது என்று கோபத்துடன் சபித்த ஆப்தே,இப்போது எல்லாமே ,கோபால் கோட்ஸே கொண்டு வந்திருந்த ரிவால்வரை ரிப்பேர் செய்வதைப் பொறுத்திருக்கிறது என்று கூறினார்.

( தொடரும் )

காந்திகொலையும்பின்னணியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories