காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 121)

கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
gandhi godse - 2026

மதன்லால் பஹ்வா கைது செய்யப்பட்ட அன்று, மாலை பிரார்த்தனைக் கூட்டத்தின்போது காந்தி கூறினார் :

‘’ வெடிகுண்டு வீசிய இளைஞன் தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளானவன்.யாரும் அவனை கேவலமாகப் பார்க்கவேண்டாம்.அவன் என்னை ஹிந்து மதத்தின் எதிரியாக கருதியிருக்கலாம்.

தீயமனம் கொண்ட ஒருவன் மதத்திற்கு ஊறுவிளைவிக்கும்போது அவன் உயிரை எடுக்க இறைவன் யாரையேனும் அனுப்புவான் என பகவத்கீதை கூறுகிறது அல்லவா ‘’

இந்தியாவில்,போலீசார் விசாரணை நடத்தும்விதம் பற்றி அறிந்திருந்த காந்தி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

‘’ அந்த இளைஞனை எந்த விதத்திலும் கொடுமைப்படுத்தாதீர்கள் ‘’.

ஆனால் மதன்லால் பஹ்வாவின் கூற்றுபடி,

போலீசார் அவரை கொடுமைப்படுத்தியது மட்டுமின்றி,சில வக்கிரத்தனமான சித்திரவதைகளுக்கும் ஆளாக்கினார்கள்.

கேள்விகள் கேட்ட வண்ணம் ,நன்கு முறுக்கிய கயிறால் பாதத்தின் உள்பகுதியில் ஓங்கி ஓங்கி அடித்தார்கள்.

கீழே படுக்க வைத்துவிட்டு,ஒரு கயிற்று கட்டிலின் இரண்டு கால்களை இரண்டு உள்ளங்கைகளின் மேல் வைத்து விட்டு அதில் ஏறிஏறி குதித்தார்கள்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

அவருடைய ஆணுறுப்பை தவறாக கையாண்டார்கள்.தடியால் அதன் மீது தாக்கினார்கள்.விரைகொட்டைகளை முரட்டுத்தனமாக பிசைந்தார்கள்.

உச்சக்கட்டமாக அவரால் தாங்கமுடியாத சித்திரவதை…..

அவரை முழு நிர்வாணமாக்கிவிட்டு ,அவர் உடம்பின் மீது எச்சில் உமிழ்ந்து,பெரிய சிகப்பு எறும்புகளை பிடித்து உடம்பின் மீது ஓடவிட்டார்கள்.அவை கடிப்பதால் பஹ்வா துடிப்பதைப்பார்த்து பரிகாசமாகச் சிரித்தார்கள்.

அவர் கதறினார்,அலறினார்,போலீஸ் அதிகாரிகள் எதிர்பார்த்ததுபோல பேசவும் செய்தார்.

அவர் மனமுவந்து தானே முன்வந்து கூறியதுபோல அவரது வாக்குமூலம் பதிவானது ;

அதில் ’ தன் கூட்டாளிகள் தன்னை கைவிட்டு ஓடிவிட்டார்கள் ; அவர்கள் கைது செய்யப்படுவதை உறுதிசெய்வது தன்னுடைய கடமை ‘ எனக் கூறியிருந்தார்.

பின்னாளில்….

’ அவர் ஆயுள் தண்டனைக்கு உள்ளாகி பின் விடுதலையடைந்து,வாழ்ந்த காலம் வரை தன்னை விசாரித்தவிதம் குறித்து நினைவுகூரும்போதெல்லாம்,

யாராலும் அத்தகைய கொடூரமான விசாரணை முறைகளை எதிர்கொண்டிருக்க முடியாது ; ஆனாலும் தனக்கு தெரிந்த எல்லா விஷயங்களையும் தான் கூறிவிடவில்லை என பெருமைப்பட்டுக்கொண்டார்.

ஒன்றுக்கொன்று முறணாகப்பேசி,தனக்கு மராத்தி புரியாததுபோல நடித்ததாகவும்,அதன் மூலம் தன் கூட்டாளிகளைப் பற்றிய அடையாளங்களை தெளிவாகக் கூறாமல் மறைத்ததாகவும் கூறினார்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

கத்தவேண்டியதை விட அதிகமாகக் கத்தியும்,தொடர்பின்றி ஆத்திரமாகப்பேசியும்,சில விஷயங்களை முணுமுணுப்பாகக் கூறியும்,தேவையற்று சம்பந்தமில்லாத அதிக தகவல்களை கூறியும் ‘ போலீஸ் டைரிகளை’ தன் வாக்குமூலத்தால் நிரப்பியதாகவும் தெரிவித்தார்.

இதன்மூலம் போலீசார் சரியான திசையில் பயணித்து,முக்கியத்தலைவர்கள் மீண்டும் தாக்கும்முன் அவர்களை கைது செய்வதை காலதாமதப்படுத்தியதாகவும் கூறினார் ‘.

மதன்லால் பஹ்வா,அவர் கூற்றின்படி,எல்லா தகவல்களையும் கூறிவிடவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும்,அவர் கூறிய தகவல்கள் போலீசாருக்கு போதுமானவையாகவே இருந்தது.

போலீசார் அந்த தகவல்களின்படி விரைந்துசெயல்பட்டிருந்தால்,ஜனவரி 30 ந் தேதியன்று காந்தியை கொல்வதற்கு முன்பே நாதுராம்,ஆப்தே உள்பட அனைவரும் பிடிபட்டிருப்பார்கள்.

( தொடரும் )

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.