அதே பயங்கரவாதப் பிரச்னைதான்… அதே இந்திய ராணுவம்தான்… அதே இந்திய வீரம்தான்! தாக்குதல் திறன் பெற்ற அதே வலிமை மிகுந்த படைகள்தான்! ஆனால், இப்போது மட்டும் எப்படி அமெரிக்க ராணுவத்தைப் போல் நாங்களும் பாகிஸ்தானுக்குள் புகுவோம் என்று அருண்ஜேட்லியால் அறிவிக்க முடிகிறது?
எப்படி சர்ஜிகல் ஸ்ட்ரைக் என துல்லியத் தாக்குதலை இந்தியா தொடுக்க முடிகிறது? அதுவும் அண்டை நாட்டின் எல்லையையும் கடந்து?!
தாலிபான்கள் ஆதிக்கம் நிறைந்திருந்த போது ஆப்கானிஸ்தானின் கந்தாஹாருக்கு இந்தியாவின் விமானத்தைக் கடத்தி, அப்போது பிணைக் கைதிகளாக பயணிகளைப் பிடித்து வைத்து, பயங்கரவாதிகளை விடுவிக்கும் படி மிரட்டினர் தாலிபன்கள்! அப்போதும் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் இருந்தது. அது 1999 டிச.24 இன்றில் இருந்து சரியாக 20 வருடம் முன்னர்!
அப்போது இண்டியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த பயணிகளைப் பாதுகாக்க, விடுவிக்கப் பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் தான் மசூத் அசார்! இன்றைய ஜெய்ஷ் இ மொஹம்மத் தலைவன்.
அப்போதும், பயங்கரவாதிகளின் மீதான தாக்குதல் எல்லாம் இந்தியாவால் மேற்கொள்ல இயலவில்லை!
தொடர்ந்து அடுத்த பத்தாண்டுகளில்… 2008 நவ. 26 -ம் தேதி அஜ்மல் கசாப் உள்பட 10 பாகிஸ்தானிய இஸ்லாமிய பங்கரவாதிகள் மும்பை மீது தாக்குதல் நடத்தினர். 174 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். அன்றைய மன்மோகன் சிங் அரசு கடைசிவரை பாகிஸ்தானுக்கு பதிலடி தரவேயில்லை. அதனை அம்பலப்படுத்தும் அன்றைய விமானப்படை தளபதி ஃபாலி ஹோமியின் முக்கிய பேட்டி.. இது…!
எல்லாம் தயாராகத்தான் இருந்தது. விமானம், திட்டம், வெடி பொருள்கள்… பாகிஸ்தானில் இருந்து வந்த கசாப் இந்தியாவைத் தாக்கியதற்கான அனைத்து வித ஆதாரங்கள்..
ஆனால் எதிர்த்து எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை! பாகிஸ்தானுக்கு எதிரான வெறும் கண்டனங்களை மட்டும் சொல்லி விட்டு, நாட்களைக் கடத்தினர்.
அப்போது கொல்லப் பட்டவர்கள், அப்பாவிகள்! இந்திய மக்கள்! மூளைச் சலவை செய்யப் பட்ட ஒரு இஸ்லாமியன் இந்திய நாட்டின் உள்ளே புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினான். ஆனால் மன்மோகனின் அரசு வேடிக்கை பார்த்தது. அதனை லைவ் டெலிகாஸ்ட் செய்தது, காங்கிரஸின் ஆதரவு எண்டிடிவி முதலானவை!
ஆனால் இப்போது நிலைமை வேறு! மாறி விட்டது. இந்தியா, தனது பலவீனம் என்று எதைக் கருதியதோ, அதை ஆட்சிக்கு வந்த தொடக்க காலத்திலேயே மோடி மேற்கொண்டார். இந்தியாவைச் சுற்றிலும் உள்ள அண்டை நாடுகளுக்கு முதலில் பயணம் செய்தார். இந்தியாவுக்கு அனைத்து நாடுகளும் நட்புக் கரம் வீசும் வகையில் பார்த்துக் கொண்டார். அதற்காக ஓயாது ஒழியாது பயணித்து, வெளிநாட்டு அரசுகளை வசீகரித்தார்.
தொடர்ந்து, ராணுவத்துக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. உள்நாட்டுப் பொருளாதாரம் சீர் செய்யப் பட்டது. வெளிநாடுகளில் கடன் வாங்குவது வெகுவாகக் குறைக்கப் பட்டது. கள்ளப் பணம் தடுக்கப் பட்டது. பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் புழங்கிய கள்ள நோட்டுகள் தடை பட்டன. அதற்கு எடுத்த நடவடிக்கைதான் டிமானிடைசேஷன் என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கை. எல்லா நடவடிக்கைகளுக்கும் காரணம் மோடி! அதனால்தான் உள்ளூர் அரசியல் கட்சிகளே கதிகலங்கிப் போய், மோடியை எதிர்ப்பதாக நினைத்து, ராணுவத்தையே குறை கூறிக் கொண்டிருக்கின்றன.
இன்று உலக நாடுகள், குறிப்பாக சீனா முதற்கொண்டு இந்திய நிலைப்பாட்டுக்கு ஆதரவு காட்டுகிறது. பாகிஸ்தான் தனிமைப் பட்டுக் கிடக்கிறது. அதனால்தான் இப்போது அமைதி அமைதி என்று கெஞ்சுகிறது. துல்லியத் தாக்குதலால் நிலை குலைந்து போயுள்ள பாகிஸ்தான், மதிகெட்ட நிலையில், பதில் தாக்குதல் தருகிறது, மக்களை நோக்கி!
ஆனால், அன்று விடுவிக்கப்பட்ட மசூத் அசார் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப் படும் வரை, தாவூத் இப்ராஹிம் இந்தியாவிடம் சரணடையும் வரை, இன்னும் பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தும் வரை… இந்தியா விடாது! மோடி விடமாட்டார்!
இதுதான் மோடிக்கும் இதுவரை இருந்த அரசுகளுக்கும் உள்ள வேறுபாடு!
உண்மையில், வல்லவன், வலிமையானவனே அஹிம்சையையும் அமைதியையும் பற்றி பேசமுடியும்!
ஒன்றுக்கும் ஆகாதவன் அமைதி பற்றிப் பேசினால் அது அவனது இயலாமை என்றே கருதி மேலும் மேலும் நசுக்கப் படுவான்!