ஆரோக்கிய உணவு: திணை, சாமை பணியாரம்!

சமையல் புதிது பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
millets 1 - 2026

சாமை திணை பணியாரம்

தேவையானப் பொருட்கள்

சாமை அரிசி – 100 கிராம்
திணை – 100 கிராம்
இட்லி அரிசி – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
வெங்காயம் – 1
கேரட் – தேவையான அளவு
கடுகு, உப்பு -தேவையான அளவு
கொத்த மல்லி -தேவையான அளவு
கறிவேப்பிலை -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

kuahi pqniyaram - 2026

செய்முறை:
திணை, சாமை, இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து ஊற வைக்கவும்.

பிறகு உப்பு சேர்த்து கிரைண்டர் / மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை 6 – 7மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பிறகு தீஞ்சட்டியில், கடுகு, உளுத்தம் பருப்பு, துருவிய கேரட், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் குழிப்பணியார சட்டியில் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
இத்துடன் தக்காளி, வெங்காய சட்னியும் சேர்த்து சாப்பிடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.