
மதுரை : தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கடந்த 4 மாதமாக பிரதி புதன்கிழமை தோறும் நடைபெற்று வந்தது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் 12 விவசாயிகளின் 28443 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்திற்கு மதுரை விற்பனைக் குழுச் செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமை தாங்கினார். இந்த ஏலத்தில் 15 வியாபாரிகள் பங்கு பெற்றனர்.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக விலையாக ரூ 13.90 க்கும் குறைந்த பட்சமாக ரூ 9.60 க்கும் சராசரியாக ரூ 10.33 க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. அனைத்து விவசாயிகளும் நல்ல விலை கிடைத்தது என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும் ரூபாய் 2.93 லட்சம் உடனடியாக வியாபாரிகளிடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
இது குறித்து, மேலும் தகவல் அறிய வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மேற்பார்வையாளர் சீனிகுருசாமி 9600802823 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..