
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக் கோயில் முன் கடைகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோயில், தல்லாகுளம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயில். இந்தக் கோயிலின் முன்பு, கோயிலுக்குச் சொந்தமான காலியிடம் உள்ளது. இதில், வாகனங்கள் நிறுத்துவதற்கும், பக்தர்கள் அமர்வதற்கும் இடம் இருந்தது.
இந்த இடத்தில் இப்போது கடைகள் கட்டி வணிக வளாகம் ஆக்குவதற்கு அறநிலையத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கு பக்தர்களும் பொதுமக்களும் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதுரை நகரின் மிகவும் பரபரப்பான பகுதியான தல்லாகுளம் பகுதியில் கோயில் எதிரில் உள்ள பொட்டல் பகுதியில்தான் பலரும் காற்று வாங்கி, கோயிலுக்குச் சென்றுவிட்டு வெளியில் வந்து நின்று செல்கின்றனர்

இந்நிலையில், கோயில் முன்பாக உள்ள பொட்டலில் கோயில் நிர்வாகம் கடைகள் கட்ட திட்டமிட்டுள்ளதற்கு கொட்டும் மழையிலும் திரண்டு வந்து, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.