spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஆசிரியர்கள் Vs எடப்பாடி பழனிசாமி ... விளைவும் பின்விளைவும்!

ஆசிரியர்கள் Vs எடப்பாடி பழனிசாமி … விளைவும் பின்விளைவும்!

- Advertisement -

அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆசிரியர்களுக்கு வழங்கப் படும் சம்பளம் குறித்தும், ஐந்தாம் வகுப்பு தலைமை ஆசிரியர் வாங்கும் சம்பளம் 80 ஆயிரத்தை கடந்து செல்லும் போது, பிஇ எம்இ படித்தவர்கள் 50 ஆயிரம் தாண்டுவது கூட சிரமம் என்றும் பேசினார். அவரது உரை வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை என்று பொதுமக்களால் பெரிதும் ரசிக்கப் படுகிறது.

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்வது, கோரிக்கை விடுப்பது இவை பற்றி அவர் குறிப்பிட்டதும், சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வு நிலை, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப் படும் ஊதியம், ஆனால் கிடைக்கும் பலன், ஓய்வூதியம் ஊதியத்துக்கே தமிழக அரசின் கஜானாவில் பெரும்பகுதி செலவாகிறது என்பது குறித்தெல்லாம் வெளிப்படையாகப் பேசியது, பொதுமக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், ஆசிரிய சமூகமோ முகம் சுருங்கிக் கிடக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்களுக்கான விளைவும் பின்விளைவும் இங்கே…

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியவை… (வீடியோ)

உங்கள் முதல்வர் தமிழ்நாட்டை மாவட்டம் என்றார். கம்பராமாயணம் சேக்கிழார் எழுதியது என்றார். சூப்பர் ஆண்பிள்ளை. இப்படி வீட்டுக்கு ஒருவர்….வேண்டாம் வீதிக்கு ஒருவர் இருந்தால் தமிழ்நாடு மட்டுமல்ல…இந்தியாவே விளங்கிடும்

***

இந்த ஆடியோவைக் கேட்டவர்க்கு மட்டுமே கீழ் வருபவை புரியும். வளர்ச்சித் திட்டத்தை முடக்கவே போராட்டங்கள் நடைபெறுகின்றன… என்று முழங்குபவரே.!

“யாருடய வளர்ச்சிக்காகப் போராடுகின்றீர்கள் “என்று விளக்க முடியுமா? ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு “80 ஆயிரத்துக்கு மேல் சம்பளம்” என்று சவடால் விடும் முதல்வரே!

appoinment முதல் retired ஆகும்வரை ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தால் கூட நீங்கள் சொல்லும் சம்பளம் கிடைப்பதில்லையே…

வரிப் பணத்தில் பெரும்பகுதி சம்பளத்திற்கே செலவாகிறது ….என்று அங்கலாய்த்துக் கொள்பவரே…

எங்கள் வரிப்பணமும் அதில் அடங்கும். அப்படியென்றால் பசுவின் வாலை அறுத்துப் பசுவுக்கே சூப் கொடுத்த கதையல்லவா உங்கள் கதை.

பல ஆயிரம் கோடி சம்பளமாக வழங்கப் படுகிறது என்று புலம்பும் பெருமகனே.. சம்பளம் என்பது உழைப்புக்குக் கிடைப்பது.

ஆனால் மணல் கொள்ளை மாஃபியா வீடுகளிலும், contractor இல்லங்களிலும், பினாமி பங்களாக்களிலும் ரெய்டு மூலம் கைப்பற்றப்பட்டது எந்த உழைப்புக் கணக்கென்று சொல்ல முடியுமா…. (PRP GRANITE, V V MINERALS etc..என்று இன்னும் எண்ணில் அடங்காக் கதைகள் வேறு…)

நாங்களாவது படித்துப் பட்டம் பெற்று, சில பல தேர்வு எழுதி, interview கடந்து, கலந்தாய்வு மூலம் பணிசெய்து வருகிறோம். தாங்கள் எந்தத் தேர்வு எழுதி இந்த மாதிரி பதவிக்கு வந்தீர்கள்? தாங்கள் அரியணை ஏறிய விதம் இந்த நாடே…ஏன் உலகமே அறியுமே!

அவர்கள் கடன் வைத்துச் சென்றனர்.. என்று கண்ணீர் விடுபவரே…..
அதை அடைக்க தில்லும் (மனத்திடம்),திட்டமும் இல்லாமல் அறியணை ஏறியது ஏன்?

Transport பற்றிப் பேசும் பெருந்தகையீரே. Retired ஆன ஊழியருக்குக் கொடுக்க வேண்டிய..,.அவர்களிடம் பிடித்த LIC பெருந்தொகை எங்கே?

“இலவச பஸ் பாஸ்” என்ற தேர்தல் பரப்புரையில் எவ்வாறு அதை ஈடு செய்வோம் என்று திட்டம் இல்லாமல்,transport லாபத்தில் அதை ஈடுசெய்வது எந்த விதத்தில் நியாயம்?

“நான் இப்போது படிப்பதைப் போல் முன்பே படித்திருந்தால்..பெரிய பெரிய doctor ஆகியிருப்பேன்” என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவரே…. எங்களுக்கும் நீங்கள் அப்படி டாக்டர் ஆகவில்லை என்பதில் மிகுந்த வருத்தமுண்டு. அப்படி நடந்திருந்தால், தமிழ்நாடே நல்லா இருந்திருக்கும்..

நாற்காலியைப் பிடிக்க நான் விரும்பவில்லை என்று கூறும் நல்லோரே…

கூவத்தூர் பங்களாவும்,கொடநாட்டு எஸ்டேட்டும்,ஆவிகளுடன் பேசுவோரிடம் தாங்கள் செய்த சமரசமும்,டெல்லி விசயமும்…..தங்களின் நாற்காலி கூறும் நல்ல சில ஆவணங்களாகும்.

“மக்கள் கொடுத்தார்கள் இந்த நாற்காலியை”என்று கூறும் கோமகனே… நன்றாக எங்களைப் பார்த்துக் கூறுங்கள்….நாங்கள் உங்களுக்கா வாக்களித்தோம்.. இப்படி அண்டப்புழுகுப் புழுகுகிறீரே.!

தமிழகத்தில்தான் அதிக அளவுப் போராட்டங்கள் நடக்கின்றன….என்று கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ஒத்துக்கொண்டு வாக்குமூலம் கொடுப்பவரே.. முதலில் நமது ஆட்சியில் குறை இருப்பதால்தானே போராடுகின்றனர்.  அப்படியானால் நம்மிடம்தான் குறை உள்ளது என அறிந்து உடனே….குறைகளைய முயற்சிக்க வேண்டும் அதுவே நல்ல தலைவனுக்கு அழகு…..(சங்க கால இலக்கியங்கள் சொல்கிறது)

ஆனால் அது நல்ல தலைவனுக்கே… கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு?!

கெட்டிக்காரனின் பொய்யே நிலைக்காது என்றால் உங்களின் பொய்யானாப் புள்ளிவிவரமும்,தவறான தகவல்களும்,வீண் பரப்புரைகளும் எவ்வளவு நேரத்திற்கு? காலம் சொல்லும் உங்களுக்கான பதிலை!

கடுங்கோபத்துடன்… களப்போராளி!

**

தலைமையாசிரியர் ஊதியத்தை பற்றி பேசியவர் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களின். கவனத்திற்கு….

உங்கள் ஆட்சிக்காலத்தில் நேரடியாக தலைமையாசிரியராக பணி நியமனம் யாரையாவது செய்துள்ளீரா? ரூ80000 சம்பளம் கொடுத்தீர்களா??

தலைமையாசிரியர் என்பது நேரடி நியமனமா? ஒரு தலைமையாசிரியராக வர குறைந்த பட்சம ஐந்து ஆண்டுகள் பணியாற்றவேண்டும் என்பது தெரியுமா? (உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் உங்களை ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு உங்கள் MLA பதவி காலவதியாகும் காலம் என்பதுதான் ஐந்தாண்டு …)

தலைமையாசிரியர் என்பது பதவி உயர்வில் பெறும் பதவி என்பது தெரியாதா? இருபது ஆண்டுகாலம் சேவை செய்த தலைமையாசிரியரும், தற்போது பணிக்கு சேரும் BE மாணவனும் ஒன்றா?

ஒரு இடைநிலை ஆசிரியர் தலைமையாசிலியராக வர 20ஆண்டுகளுக்குமேல் கல்வி சேவை செய்யவேண்டிய நிலை உள்ளது என்பது அறிவீரா? ..

ஒரு ஒப்பிடு செய்து பார்ப்போம்

அதாவது நீங்கள் கூறும் BE படித்த மாணவன் வேலைக்கு வர 20,அல்லது 22ஆண்டுகள் என்ற அவன் கல்வி கற்று வந்திருப்பான்.. ஒரு ஆசிரியரின் 20 ஆண்டுகளாக சேவையும் சற்று ஒப்பிட்டு பாருங்கள்…  50ஆயிரம்தான் ஊதியம் பெறுகிறான் என்று கூறுகிறீர்…அந்த மாணவன் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே் அவர்பணிக்கு வந்துவிட்டார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்…

ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் 55000 ஆயிரத்தை 1,10,000ஆக உயர்த்துக்கொண்ட நீங்கள்… தலைமையாசிரியர் தற்போது பெறும் ஊதியம் கலைஞர்,
எம்ஜிஆர் ஜெயலலிதா, இவர்களின் ஆட்சிக்காலத்தில் படிப்படியாக உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியம் என்பதை தாங்கள் உணருங்கள்..

எங்களிடன் எந்த ஊழலுமில்லை என ஒவ்வொருவரும் நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம்.. உங்களால்…..?

முதல்வர் பழனிசாமிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம. பொதுச்செயலாளர. பாவலர் க.மீனாட்சிசுந்தரம் கண்டன அறிக்கை

***

வாரி வழங்கிவிட வில்லை…
??மொத்த மாநிலத்தின் வருவாயில் 71 % அரசு ஊழியர் , ஆசிரியர் சம்பளமாக வழங்கப் படுகிறது என தவறான கண்ணோட்டம் மக்களிடையே பரப்ப படுகிறது…

??இதிலுள்ள முழு விவரம் & முழு விளக்கம் எனக்கு தெரிந்தவரை பதிவிடுகிறேன் , நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்….

?? 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். (7,21.88,958) தற்போது 2018 ல் இந்த மக்கள் தொகை எவ்வளவு உயர்ந்து இருக்கும் அல்லவா ?

??தமிழ்நாட்டில் மொத்த அரசு ஊழியர் , ஆசிரியர்கள் எண்ணிக்கை சற்றே ஏறக்குறைய 12 லட்சம் பேர்…

??8 கோடி மக்களுக்கு பணியாற்ற 12 லட்சம் பேர்…

??மொத்த மக்கள் தொகையில் அரசு ஊழியர் ஆசிரியர் எண்ணிக்கை 2 அல்லது 3 சதவீதம் , அதாவது 97% மக்களுக்கு பணியாற்ற 3% ஊழியர்கள் – இதன் மூலம் ஏற்படும் பணிச்சுமையை உணரமுடியும் …

??அரசு என்பது லாப நோக்கம் கருதாது மக்களுக்கு சேவையாற்றும் அமைப்பு , அத்தகு அரசின் நலத்திட்டங்களை இந்த அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் வழியாகத்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்…

??சம்பள உயர்வு என்பது தற்போதுள்ள விலைவாசி , வளர்ச்சி , தனிமனித வாங்கும் சக்தி இவற்றை வைத்தே அளவிடப் படுகிறது…

??போராட்டம் நடத்துவதால் வாரி வழங்கவிட யார் அப்பன் வீட்டு பணமும் இல்லை, சாதாரண கூலி தொழிலாளி வருமானம் கூட உயர்ந்து வரும் நிலையில் 8 கோடி மக்களுக்கு பணியாற்றும் ஊழியரின் சம்பளம் தற்போது மத்திய அரசு வழங்கும் ஊதியத்தின்படி மாநில பணியானர்களுக்கும் வழங்க கோருவதில் என்ன தவறு…?

??உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற 5 வருடத்தில் கோடிக் கணக்கில் சொத்து சேர்த்துவிடுவர் , அவர்கள் ஊதியம் எவ்வளவு , எப்படி 5 வருடத்தில் கோடி கணக்கில் சொத்து வந்தது என யாரும் கேட்பதில்லையே ஏன் ?

??MLA க்கள் ஊதியம் மாதந்தோறும் சம்பளம் மற்றும் படிகளுடன் சேர்த்து பெறும் மொத்த தொகை ரூ.2 லட்சத்து 50 ஆயிரம். 234 பேருக்கு 5கோடியே 85 ஆயிரம் , இது தவிர ஒரு நாள் MLA வாக இருந்தால் கூட கடைசி வரை பென்சன் , இதர சலுகைகள் எக்கசக்கம் , இவர்களுக்கு செலவாகும் தொகை அரசு ஊழியர்கள் சம்பளமாக வழங்கப்படும் 71% ஊதியத்திலிருந்து கழித்து விடுங்கள் மக்களே , மீதி தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த படி 41%

??நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் , 10 லட்சம் மதிப்பு என்று வைத்துக் கொள்வோம் , இதில் கொத்தனார் கூலி சற்றே ஏறக்குறைய 50% ஆக இருக்குமா? இல்லையா ? அதேபோலத்தான் அரசு நடத்த இந்த அரசு ஊழியர்கள் தேவை , அரசு அலுவலகங்களில் மின்விசிறி , நாற்காலி , கழிவறை கூட இருக்காது, டப்பா கம்பயூட்டர்ஸ் , ஒன்றும் வேண்டாம் அரசு பேருந்து ஓட்டுநரை கேட்டுபாருங்கள் அந்த பேருந்தை வைத்து கொண்டு அவர் படும் சிரமத்தை …..

??சரி இறுதியாக MLA க்களின் சொத்து மதிப்பு , நீங்கள் வாரி வழங்கிவிட்ட 30 ஆண்டுகள் பணிசெய்த அரசு ஊழியர்கள் சொத்து மதிப்பு , இதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாங்கியுள்ள கடன் எவ்வளவு , அதற்கு அவர்கள் செலுத்து தவணை எவ்வளவு , இதேபோல MLA உட்பட இதர அரசியல் உழைப்பாளிகள் யாராவது கடன் வாங்கி உள்ளனரா என்பதை அறிக்கையாக வெளியிட அரசு தயாரா ?

??மாநிலத்தின் வருவாய் உயராமல் அதே நிலையில் இருந்தால் ஆட்சியாளர்கள் PERFORMANCE MATRIX என்ன என்பதை மக்களே உணர்வார்கள்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,163FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,901FollowersFollow
17,200SubscribersSubscribe