தினை விதைத்தவன் தினை அறுப்பான் ! தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் !

Published:

thinai rice - 2026தினை அரிசி வெஜிடபிள் உப்புமா

சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று தினை அரிசி, காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான #பொருட்கள் :

தினை அரிசி             – ஒரு கப்,
வெங்காயம், கேரட்   – தலா ஒன்று,
பச்சைப் பட்டாணி     – அரை கப்,
காய்ந்த மிளகாய்      – 2,
கடுகு                       – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு       – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள்     – சிறிதளவு,
மஞ்சள்தூள்              – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை,        – சிறிதளவு,
கொத்தமல்லி           – சிறிதளவு
எண்ணெய்               – ஒரு டீஸ்பூன்,
உப்பு                        – தேவையான அளவு.veg uppuma - 2026செய்முறை :

வெங்காயம், கேரட், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும். இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கொதித்ததும் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும். 10 நிமிடம் வேக வைக்கவும்.

தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான தினை அரிசி வெஜிடபிள் உப்புமா ரெடி

Related articles

Recent articles

spot_img