ஆரோக்கிய சமையல்: கருப்பு உளுந்து அடை!

Published:

black - 2026

கருப்பு உளுந்து அடை

கருப்பு உளுந்து, புரதச் சத்துமிக்க தானியம் ஆகும். எலும்புகள் வலுவடைய இது உதவும். எனவே… துவையல், அடை, இட்லி மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தயாரிக்கும்போது கருப்பு உளுந்து சேர்ப்பது நல்லது.

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – 250 கிராம்,
கருப்பு உளுந்து – 100 கிராம்,
துவரம்பருப்பு – 1 கப்,
வெங்காயம் – 3,
காய்ந்த மிளகாய் – 5,
இஞ்சி – சிறு துண்டு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

black adai - 2026

வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

புழுங்கல் அரிசி, கருப்பு உளுந்து, துவரம்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும்.

அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைத்து கொள்ளவும். உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்த மாவில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

சத்தான கருப்பு உளுந்து அடை ரெடி

Related articles

Recent articles

spot_img