ஆரோக்கிய சமையல்: கேபேஜ் கோப்தா!

Published:

cabbage - 2026

கேபேஜ் கோப்தா

தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ் துறுவியது – 3 கப்

கடலைமாவு – 1 கப்

எண்ணெய் – சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :

மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

கரம் மசாலா தூள் – 1/2 தே.கரண்டி

மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

cabbage kofta 1 - 2026

முட்டைகோஸினை காரட் துறுவது போல் துறுவி கொள்ளவும்.

துறுவிய கோஸ் + கடலைமாவு + தூள் வகைகள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம். கோஸ் துறுவலிலே தண்ணீர் நிறைய இருக்கும்.)

சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

குழிபணியார கடாயில் சிறு துளி எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளை போட்டு வேகவிடவும்.

ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.

ஒவ்வொரு பக்கமும் நன்றாக வேகவிடவும். சுவையான எளிதில் செய்ய கூடிய கோப்தா ரெடி. இதனை க்ரேவி செய்து கோப்தா க்ரேவில் சேர்த்து சாப்பிடலாம்…அல்லது அப்படியே கலந்த சாதமுடன் சாப்பிட அருமையான காம்பினேஷன்..

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

குறிப்பு :

முட்டைகோஸினை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொண்டு துறுவினால் எளிதில் துறுவலாம். அல்லது ஒவ்வொரு இதழாக எடுத்து அதனை சூருட்டி வைத்து கொண்டு துறுவலாம்.

கண்டிப்பாக தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டாம். துறுவிய முட்டைகோஸிலேயே நிறைய தண்ணீர் இருக்கின்றது.

இதனை குழிபாணியாரம் சட்டியில் செய்து இருப்பதால் உருண்டைகள் உடையாமல் கோப்தா மாதிரி இருக்கும்…அதுவே தோசை கல்லில் செய்தால் கட்லட் மாதிரி ஆகிவிடும்.

கடலைமாவினை எப்பொழுதும் 3 – 4 நிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து கொள்ளவும். அப்பொழுது தான் மாவின் வாசனை நீக்கிவிடும். மைசூர்பாகு அல்லது எந்த ஒரு கடலைமாவு சேர்க்கும் உணவாக இருந்தாலும் கடலைமாவினை முதலில் கண்டிப்பாக வறுத்து கொண்டு சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

முட்டைகோஸினை துறுவிய பிறகு கடைசியில் கொஞ்சம் எளிதில் துறுவ முடியாது.. அதனை க்ரேவி செய்யும் பொழுது வெங்காயம் + தக்காளி சேர்த்து வதக்கி அரைக்கும் பொழுது அந்த முட்டைகோஸினையும் வதக்கி சேர்த்து அரைத்து கொள்ளவும்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

Related articles

Recent articles

spot_img