விரும்பி உண்ண வெஜிடபிள் சீஸ் சோமாஸ்!

வெஜிடபிள் – சீஸ் சோமாஸ்

pannerr somas - 2026

மாலையில் குழந்தைகளுக்கு சுவையான சிற்றுண்டியாக காய்கறிகளால் ஆன சத்தான சோமாஸ் செய்து கொடுத்து அசத்தலாம்.

வெஜிடபிள் – சீஸ் சோமாஸ்
தேவையான பொருட்கள் :

மைதா மாவு – 2 கப்
உருளைக் கிழங்கு – 2
கேரட், பீன்ஸ், – 2 கப்
சீஸ் – அரை கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு – 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
கறிமசாலா தூள் – 1 டீஸ்பூன்
பிரெட் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

பூரணம் செய்முறை :

உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

சீஸை துருவிக்கொள்ளவும்.

காய்கறிகள், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்..

ALSO READ:  மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது பட்டை, சோம்பு போட்டு தாளித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.

அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி நன்றாக சேர்த்து வதக்கவும்.

தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.

மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.

சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து மிதமாக தீயில் எரிய விடவும்.

காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

நன்றாக கெட்டியாக சேர்ந்தாற்போல் வர, ரொட்டித்தூள் சேர்த்து கிளறிக் கொள்ளலாம். மசாலா நன்றாக ஆறியவுடன் அதனுடன் துருவிய சீஸை போட்டு நன்றாக கிளறி வைக்கவும்.

சோமாஸ் செய்முறை :

மைதா மாவை சலித்து எடுத்து கொஞ்சம் நெய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்து இலேசாக வட்டமாக தேய்த்து காய்கறி பூரணத்தை நடுவில் வைத்து மடித்து ஓரங்களை சோமாஸ் கத்தியால் வெட்டவும்.

இதேபோல் மொத்தமாக சோமாஸ்கள் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்துள்ள சோமாஸ்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான காய்கறி சீஸ் சோமாஸ் ரெடி.

தொட்டுக்கொள்ள தக்காளி கெட்ச்அப் ஏற்றது. மாலை நேரத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories