மாலை நேரம் மனதுக்கு பிடித்த நட்ஸ் பக்கோடா செய்யுங்க!

Published:

peanut - 2026

நட்ஸ் பக்கோடா

தேவையானப் பொருள்கள்:

முந்திரி –1/2 கப்
வேர்க்கடலை _1/2 கப்
கடலை மாவு _3 டீஸ்பூன்
அரிசிமாவு –ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் –ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் -சிறிது
இஞ்சி –சிறிது
கறிவேப்பிலை _5 இலைகள்
உப்பு -தேவைக்கு
கடலை எண்ணெய் _பொரிக்க தே. அ

செய்முறை:

cashew 1 - 2026

வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.தோலை நீக்க வேண்டாம்.

அடுத்து சிறிது நெய் விட்டு முந்திரியை வறுத்துக்கொள்ளவும்.

ஆறியதும் இரண்டையும் ஒரு கிண்ணத்தில் போட்டு ஒன்றாகக் கலந்து வைக்கவும்.

கடலைமாவு,அரிசிமாவு,மிளகாய்த்தூள்,பெருங்காயம்,உப்பு, இஞ்சி (பொடியாக நறுக்கி),கறிவேப்பிலை (கிள்ளிப்போட்டு) இவற்றை ஒன்றாகக் கலந்து வைக்கவும்.

இக்கலவையை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியை முந்திரி,வேர்க்கடலை இவற்றில் சேர்த்து குலுக்கிவிட்டு,ஒரு 5 நிமி அப்படியே வைக்கவும்.

casew pennet pakkota - 2026

அடுத்து அதில் லேசாகத் தண்ணீர் தெளித்து ஒரு ஸ்பூனால் கலக்கிவிடவும். மீண்டும் ஒரு 5 நிமி வைக்கவும்.

அடுத்து மீதமுள்ள கலவையை சேர்த்து மீண்டும் ஸ்பூனால் கலக்கி விடவும்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

இப்போது முந்திரி,வேர்க்கடலை இரண்டுக்கும் coating கொடுத்தமாதிரி இருக்கும்.

அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒவ்வொன்றாக எண்ணெய் கொண்டமட்டும் போட்டு பொரித்தெடுக்கவும்.

நல்ல மொறுமொறுப்பான,சத்தான‌ மாலை நேர ஸ்நாக்ஸ் தயார்.

Related articles

Recent articles

spot_img