பார்த்தவுடன் கிளம்பும் ஆசை! 4 நட்ஸ் ரவா தோசை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
rava dosai - 2026

மல்டி நட்ஸ் ரவா தோசை

தேவையானவை:
ரவை – 50 கிராம்,
அரிசி மாவு – 100 கிராம்,
சீரகம் – சிறிதளவு,
மைதா மாவு – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
நெய் – 50 கிராம்,
சர்க்கரை – ஒரு சிட்டிகை,
துருவிய பாதாம்,முந்திரி,வால்நட்,பிஸ்தா – தலா ஒரு டீஸ்பூன்,
உலர் திராட்சை – 20,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, மைதா மாவு, சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தண்ணீர்விட்டு நீர்க்கக் கரைத்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். தவாவைக் காய விட்டு மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, துருவிய நட்ஸ், உலர் திராட்சை தூவி, சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.