ஆரோக்கிய உணவு: பீட்ரூட் வடை!

Published:

betroot - 2026

பீட்ரூட் வடை

தேவையானப் பொருட்கள்

பீட்ரூட் துருவல் – 1 கப்,
வெங்காயம் – 1,
வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு – 1,
மஞ்சள் தூள் – சிறிது,
மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
கரம் மசாலாத் தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு,
கொத்த மல்லித் தழை – சிறிது.

செய்முறை

பாத்திரத்தில் பீட்ரூட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், மசித்த உருளைக் கிழங்கு,

மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, நறுக்கிய கொத்த மல்லித் தழை

அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து வடைகளாக தட்டி சூடான எண்ணெய்யில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

Related articles

Recent articles

spot_img