பலாக்கொட்டை துவையல்!

Published:

palakkottai - 2026

பலாக்கொட்டைத் துவையல்:

தேவையான பொருட்கள்:

பலாக்கொட்டை -10;
உளுத்தம்பருப்பு -1 ஸ்பூன்;
கடலைப் பருப்பு -1ஸ்பூன்;
வர மிளகாய் -4;
புளி – எலுமிச்சையளவு;
கருவேப்பிலை -1 கொத்து;
பெருங்காயம் -சிறிது;
எண்ணெய் -1ஸ்பூன்;
உப்பு -தேவையான அளவு.

palakkottai thuvaiyal - 2026

செய்முறை;

பலாக்கொட்டையை வேக வைத்து தோலுரித்து மசித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பருப்புகளையும், மிளகாயையும் சிவக்க வறுத்து எடுக்கவும்.

ஆறியதும், மிக்ஸியில் முதலில் வறுத்தவைகளைப் போட்டு உப்பு பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். பிறகு பலாக்கொட்டையை சேர்த்து அரைக்கவும். கடைசியாக புளியை சேர்த்து கொஞ்சம் நீரையும் விட்டு அரைத்து எடுக்கவும்.

மோர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம் சாதத்தில் போட்டு பிசசைந்தும் சாப்பிடலாம்.

Related articles

Recent articles

spot_img