கேரள சமையல்: அடை பிரதமன்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
adai prathaman - 2026

அடைப் பிரதமன்

தேவையானவை:
பச்சரிசி – ஒரு கப்,
வெல்லம் – 100 கிராம்,
தேங்காய் – ஒன்று,
முந்திரி, திராட்சை – தலா 10,
ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை,
நெய் – தேவையான அளவு,
எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:

தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். பச்சரிசியை ஊற வைத்து நைஸாக அரைக்கவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி பச்சரிசி மாவை ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின்பு சிறு சிறு துண்டுகளாக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும். அடிகன மான ஒரு பாத்திரத்தில் அடை துண்டுகளுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு வெல்லக் கரைசல், ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.