சென்னை சோழிங்கநல்லூரில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார் இளம்பெண் ஒருவர். கோவையைச் சேர்ந்த அந்தப் பெண் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
அவர் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, காவலாளி சுபாஷ் பலாத்காரம் செய்ய முயன்றதால் கூச்சலிட்டுள்ளார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் காவலாளி தப்பிச் சென்றுள்ளார்.
இதை அடுத்து, அந்தப் பெண் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் தப்பி ஓடிய காவலாளி சுபாஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




