வெண்டைக்காய் தயிர்பச்சடி
தேவையானவை:
வெண்டைக்காய் 6,
பெரிய வெங்காயம் 1,
தயிர் அரை கப்,
தேங்காய் துருவல் 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் 2,
சீரகம் கால் டீஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.
தாளிக்க:
எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்,
கடுகு அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 1,
பெருங்காயம் 1 சிட்டிகை.
செய்முறை:
வெண்டைக்காயை மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் லேசாக தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அதில் வெண்டைக்காயைப் போட்டுப் பொன் வறுவலாக வறுத்தெடுக்கவும். பின்னர் எண்ணெயைக் கொஞ்சம் வடித்துவிட்டு, மீதி இருக்கும் 2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதோடு அரைத்த விழுதையும் சேர்த்து, பச்சை வாடை போக வதங்கியதும் இறக்கி, ஆறியதும் தயிரில் கலக்கவும். வறுத்து வைத்திருக்கும் வெண்டைக்காய்களையும் கலந்து பரிமாறுங்கள். பரிமாறுவதற்கு முன், ஏற்கெனவே வறுத்து வைத்திருக்கும் வெண்டைக்காய் வில்லைகளை சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.