
கேபேஜ் பக்கோடா
தேவையானவை:
துருவிய கோஸ் – கால் கிலோ,
கடலை மாவு – 100 கிராம்,
அரிசி மாவு – 20 கிராம்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா – தலா ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய் – 250 கிராம்,
மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) நன்கு கலந்து, சிறிதளவு நீர் விட்டு பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.


