
ராகி பக்கோடா
தேவையானவை:
கேழ்வரகு மாவு – 100 கிராம்,
கடலை மாவு – 50 கிராம்,
அரிசி மாவு – 2 டீஸ்பூன்,
வெங்காயம் – 2 (நீளமாக நறுக்கவும்),
இஞ்சி – ஒரு துண்டு (நசுக்கவும்),
பச்சை மிளகாய் – 4 (நசுக்கவும்),
நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய் – கால் கிலோ,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
கேழ்வரகு மாவு, கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித் தெடுக்கவும்.