இத மாதிரி செஞ்சு பாருங்க பொடித்தூவல்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
podi thuval

பொடித்தூவல்

தேவையானவை:
புடலங்காய் (சிறியது) – ஒன்று,
மிளகாய் வற்றல் – 2,
கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தாளிக்க தே. அ,
தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
பச்சை மிளகாய் – 2,
உப்பு – தே.அளவு.

செய்முறை:
புடலங்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்து, வேக வைத்த புடலங்காயை சேர்த்துக் கிளறி… உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். கடைசியாக, பொடித்து வைத் திருக்கும் தேங்காய் – மிளகாய் பொடியை மேலே தூவி புரட்டி இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.