
விவோ நிறுவனம் விரைவில் புதிய விவோ Y32 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.
அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
விவோ Y32 ஸ்மார்ட்போனின் மாடல் எண் V2158A என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த புதிய 6.5-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ Y32 ஸ்மார்ட்போன்.
வெளிவந்த தகவலின்படி விவோ Y32 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
குறிப்பாக விவோ Y32 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90 சிப்செட் வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
விவோ Y32 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.
மேலும் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய விவோ Y32 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080×2408 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக இந்த ஸமார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11.1 மூலம் இயக்கப்படுகிறது.
குறிப்பாக இந்த சிப்செட் வசதிபயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.
மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது இது மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1 டிபி வரை மெமரி விரிவாக்க ஸ்லாட் வசதி இருக்கிறது.
விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமானபுகைப்படங்கள், க்களை எடுக்க முடியும்.
விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.
மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸகேனர், ஆக்ஸிலரோ மீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காமர்ஸ் மற்றும் கைரோஸ்கோப் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போன்.
அதேபோல் விரைவில் வரும் விவோ Y32 ஸ்மார்ட்போனும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதாவது இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், தொடர்ந்து பல நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.