
ஆண்மை பெருக இலவம்
நமது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இலவமரம் ஓர் வரப்பிரசாதம். இலவ மரத்தின் துவர்ப்பு நமது உடம்பிற்குத் தேவையான ஆற்றலை வாரி வழங்குகிறது.
நமது உடம்பிலுள்ள கழிவுச் செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கி நமக்கு புத்துணர்ச்சி தருகிறது. இலவ மரத்தின் பிசினுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும் குணம் உண்டு. அதேபோல் ஆண்களின் உயிரணுக்கள் பெருக்கத்திலும் இலவம் பிசினுக்கு முக்கிய இடம் உண்டு.
இலவம் பிசினை 100 கிராம் அளவில் வாங்கி நெய்யில் வறுத்துத் தூள் செய்துகொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை உணவுக்குப் பின் சாப்பிட்டுவர, சுக்கிலம் கெட்டிப்பட்டு, போக இச்சையைத் தூண்டி போகம் நீடிக்கச் செய்யும்.
இலவம் பிசின், முருங்கைப்பிசின், பாதாம் பிசின், ஆலம் பிசின், அரசம் பிசின், வேப்பம் பிசின் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் அளவில் சேகரித்து சுத்தப்படுத்தி, தனித்தனியே நெய்யில் வறுத்து தூள் செய்து, பின்னர் தூள் செய்தவற்றை ஒட்டுமொத்தமாய்க் கலந்து வைத்துக் கொள்ளவும்.
இதில் காலை, இரவு உணவுக்குப்பின் இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டுவர, ஆண்மை சத்தி மேம்படும். இது ஓர் போகம் பெருக்கி, உணர்வெழுப்பி என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
மேற்கண்ட மருந்தினை முறையாய் பக்குவப்படுத்தி, பயன்படுத்தி வாருங்கள். குழந்தைபேறு ஏற்படும்.