spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுகால் ஆணியா? வேரோடு எடுக்கும் வைத்திய முறைகள்!

கால் ஆணியா? வேரோடு எடுக்கும் வைத்திய முறைகள்!

- Advertisement -
kal ani

காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் காலில் ஆணி நோய் பலருக்கு வருகிறது.

காலில் ஆணி வந்து விட்டால், பாத‌த்தை தரை‌யி‌ல் வை‌க்க முடியாத அள‌வி‌ற்கு ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்து‌ம்.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும்

கால் ஆணியினால் ஏற்படும் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமே காணப்படும். அந்த அறிகுறிகளுள் அடங்குபவை:

கடினமான தோல்.
பாதிக்கப்பட்ட பகுதி கூம்பு வடிவமாகவோ அல்லது வட்டமாக தோற்றமளித்தல்.

பாதிக்கப்பட்ட இடத்தில் வெள்ளை, மஞ்சள் அல்லது சாம்பல் போன்ற நிறமாற்றங்கள் ஏற்படுதல். நடப்பதில் ஏற்படும் சிரமம்.

கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது.

பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத் தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.

காலணிகளை அடிக்கடி மாற்ற வேண்டும். சாலிசிலிக் அமில களிம்புகளை போட வேண்டும். யூரியா அதிகம் உள்ள களிம்புகளை போடும் போது குறையும். அறுவை சிகிச்சை மூலமும் கால் ஆணியை அகற்றலாம்.

கால் ஆணி ஏற்பட்ட உடனேயே, பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

அம்மான் பச்சரிசி செடியை சிறுசு சிறுசா உடைச்சு அதில வர்ற பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கிடைக்காது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செய்ய வேண்டும். முதலில் வலி குறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைஞ்சிரும்.

சித்திரமூலம்(கொடிவேலி) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா… மூணு நாள்ல குணம் கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண் உண்டாகும். அப்படி வந்தா… ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைச்சு, புண் வந்த இடத்துல பூசுனா புண் ஆறிடும். கால் ஆணியும் காணாமப்போயிரும்.

கொய்யா இலையை பயன்படுத்தி கால் ஆணிக்கான மருந்துவ தயாரிக்கலாம். விளக்கெண்ணெயுடன், கொய்யா இலை பசை, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை கால் ஆணி மீது பூசிவர பிரச்னை சரியாகும்

கடுகை பயன்படுத்தி கால் ஆணியை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் வறுத்து பொடி செய்த கடுகு, மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். இரவு நேரத்தில் தூங்க போகும் முன்பு கால்களை சுத்தப்படுத்தி இந்த தைலத்தை தடவினால், கால் ஆணி குணமாகும்.

வேப்பிலையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். வேப்பிலை இலை பசை, குப்பைமேனி இலை பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி, உள்ளங்கை தடித்திருந்தால் அந்த இடத்தில் இந்த பசையை வைத்து துணியால் இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்னை சரியாகும். குப்பைமேனி, வேப்பிலை ஆகியவை மருத்து குணங்களை கொண்டவை.

இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடலாம்.

அதிமதுரத்தை கடுகு எண்ணெயில் உரைத்துப் போடலாம். ஆமணக்கு எண்ணெயையும் இதற்கு பயன்படுத்தலாம்.

மூலிகைகளில் இருந்து ஷாரம் தயாரித்து காரத்துடன் கட்டுப்போடலாம். எலுமிச்சை சாறுடன் வெள்ளை பூண்டு சேர்த்து கட்டுப்போடலாம். மின்சார சூட்டு கோல் மூலம் காலணியை கரித்த பின்னர் சோற்று கற்றாழை ஜெல்லினை பயன்படுத்தலாம்.

பப்பாளிகாயை அரைத்து கால் ஆணியில் கட்டி வைக்கலாம். சுண்ணாம்பை காலில் வைத்து கட்டலாம். ஆப்பசோடாவுடன் எலுமிச்சசை சாறு கலந்து கட்டலாம். சிடார் வினிகரில் 20 நிமிடம் காலை ஊற வைத்து கால் ஆணியில் ஆப்ப சோடா வைத்து கட்டலாம்.

இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஆணியையும் அதை சுற்றி உள்ள பகுதியையும் படிகக் கல்லால் மசாஜ் செய்வது நல்ல தீர்வை தரும். படிகக் கல், இறந்த மற்றும் தடிமனான தோலை நீக்கி, வலியை குறைத்து சீக்கிரம் குணமாக உதவுகிறது.

  1. தூங்கபோவதற்கு முன், கால்களை வெந்நீரில் 10 நிமிடம் வைக்கவும். இதனால் தடிமனான தோல் மென்மையாகும்.
  2. காலில் ஆணி உள்ள இடத்தில் படிகக்கல்லை வைத்து 3 முதல் 5 நிமிடங்கள் வரை மென்மையாக மசாஜ் செய்து, பின்பு கால்களை உலர விடவும்.
  3. சிறிது பஞ்சை ஆமணக்கு எண்ணெயில் நனைத்து, ஆணி மீது வைத்து, அதன் மீது டேப் ஒட்டி, இரவு முழுவதும் விடவும்.
  4. அடுத்த நாள் காலையில் கட்டை பிரித்து, பல முறை ஆமணக்கு எண்ணெய் தேய்க்கவும்.
  5. ஆணி முழுவதும் சரி ஆகும் வரை இதை திரும்ப திரும்ப செய்யவும்.

கால் ஆணிக்கு, வெள்ளை வினிகர், ஒரு சிறந்த, சோதனை செய்யப்பட்ட நிவாரணி ஆகும். இது, தடிமனான தோலை மென்மை ஆக்குகிறது. மேலும் அதன் ஆண்டிபங்கல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் நோய்த்தொற்றின் அபாயத்தை குறைக்கின்றன.

  1. படுக்கைக்கு செல்வதற்கு முன் ஒரு பங்கு வெள்ளை வினீகருடன் மூன்று பங்கு தண்ணீர் சேர்க்கவும்.
  2. இந்த நீர்த்த வினிகர் கலவையை ஆணியின் மீது தடவவும்.
  3. அந்த இடத்தை நன்கு கவர் செய்து, இரவு முழுவதும் விடவும்.
  4. அடுத்த நாள் காலையில் கட்டை தளர்த்தி, தோல் மீது, படிகக்கல் அல்லது உப்பு காகிதத்தை வைத்து தேய்க்கவும்.
  5. சிறிது ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி அந்த இடத்தை சற்று ஈரப்படுத்தவும்.
  6. ஆணி உதிர்ந்து வரும் வரை இதை செய்யவும்.

பேக்கிங் சோடா, இறந்த செல்களை இயற்கையாக உதிர வைக்கும் தன்மை கொண்டது. இது ஆணியையும் அதனை சுற்றியுள்ள இறந்த செல்களையும் உதிரவைப்பதுடன், ஆண்டிபங்கல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் கொண்டுள்ளதால், நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.

  1. சூடான நீரில் இரண்டு தேக்கரண்டி சமையல் சோடா சேர்த்து, கால்களை அதில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கவும். ஆணி உள்ள இடத்தில் படிகக்கல் வைத்து தேய்த்து காய்ந்த தோலை எடுக்கவும்.
  2. மற்றொரு முறை – ஒரு தேக்கரண்டி சமையல் சோடா, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்யவும். கவனமாக இதை ஆணி உள்ள இடத்தில் தடவவும். ஒரு பேண்டேஜ் வைத்து கட்டி இரவு முழுவதும் விடவும். அடுத்த நாள் காலையில், கட்டை பிரித்து அந்த பேஸ்டை மிதமான சுடுநீரில் கழுவி, காய்ந்த தோலை படிகக்கல் வைத்து தேய்த்து உதிர்க்கவும்.

எலுமிச்சை, வீட்டிலேயே கால் ஆணி பிரச்சனையை சரி செய்ய மற்றுமொரு சிறந்த நிவாரணி. ஆணியை ஏற்படுத்தும் தடிமனான தோலை, எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மிருதுவாக்குவதால், இறுதியில் அது உதிர்ந்து விழுந்து விடுகிறது.

  1. ஆணியின் மீது, பிரெஷ் எலுமிச்சை சாறு விட்டு, அதை காய விடவும். நாளொன்றுக்கு மூன்று முறையாவது இதை செய்யவும்.
  2. இதற்கு மாற்றாக, ஒரு தேக்கரண்டி பிரெஷ் எலுமிச்சை சாற்றில் இரண்டு கிராம்புகளை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்பு கிராம்புகளை எடுத்துவிட்டு எலுமிச்சை சாற்றை ஆணி மீது விடவும். அது காய்ந்த பின் மறுபடியும் விடவும். ஒரு நாளுக்கு பல முறை இதை செய்யவும்.
  3. இன்னொரு விதம் – எலுமிச்சை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி புளிப்பு ஈஸ்ட் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இதை ஆணி உள்ள இடத்தில் தடவி, பேண்டேஜ் போட்டு, இரவு முழுவதும் விடவும்.

இந்த மூன்றில் நீங்கள் எதை வேண்டுமானாலும் நிவாரணம் கிடைக்கும் வரை தினமும் செய்யலாம்.

பூண்டு இயற்கையில் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது என்பதால், கால் ஆணி சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், பூண்டு ஆண்டிபங்கல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகளும் கொண்டுள்ளதால், நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

  1. பாதி பூண்டை ஆணியின் மீது வைத்து தேய்க்கவும். தோல் காய்ந்த பிறகு, பேன்டேஜ் போட்டு இரவு முழுவதும் விடவும். அடுத்த நாள் காலையில் கட்டை பிரித்து, கால்களை மிதமான நீரில் கழுவவும். கால் ஆணி மறையும் வரை தினமும் இரவு இதை செய்யவும்.
  2. மாற்றாக, இரண்டு மூன்று பூண்டு துண்டுகளை உப்பு கலந்து ஒரு பேஸ்ட் போல செய்து அதையும் காலில் தடவலாம். இந்த பேஸ்டை காலில் ஆணி உள்ள இடத்தில் தடவி, பேண்டேஜ் போட்டு மூன்று நாட்கள் விடவும். மூன்றாவது நாள், கட்டை பிரிக்கும்போது, ஆணி உதிர்ந்து வந்து விடும். தேவைபட்டால், இதை மீண்டும் செய்யவும்.
  3. மற்றுமொரு விதம் – இரண்டு பூண்டு விழுதுகளை வைத்து பேஸ்ட் போல செய்து, சிறிது வினிகர் சேர்த்து அதை ஆணி மீது தடவவும். அதன் மீது பஞ்சு வைத்து, டேப் போட்டு ஒட்டவும். மூன்று மணி நேரம் கழித்து டேப்பை நீக்கி அந்த இடத்தை சுத்தம் செய்யவும். பல வாரங்களுக்கு இதை மீண்டும் மீண்டும் செய்யவும்

டர்பெண்டைன் எண்ணெய் கால் ஆணியை சரி செய்ய உதவும் இது, ஒரு வலிமையான ஆன்டிசெப்டிக். இந்த எண்ணெய் தோலுக்குள் விரைவாக ஊடுருவுவதால், விரைவில் குணமாக்குகிறது.

  1. ஒரு மெல்லிய துணியில், ஐஸ் கட்டியை வைத்து, காலில் ஆணி உள்ள இடத்தில், இரண்டு நிமிடம் மசாஜ் செய்யவும். ஈரம் காய்ந்ததும், அதன் மீது டர்பெண்டைன் எண்ணெய் தடவி, பேண்டேஜ் போட்டு, இரவு முழுவதும் விடவும். படுக்கைக்கு போகும் முன்பு இதை செய்யவும்.
  2. மாற்றாக, நான்கில் ஒரு பங்கு எக்ஸ்ட்ரா விர்ஜின் தேங்காய் எண்ணெயை மைக்கிரோவேவில் உருக்கி, அதனுடன், ஒரு தேக்கரண்டி டர்பெண்டைன் எண்ணெய் மற்றும் இரண்டு தேக்கரண்டி கற்பூர எண்ணெய் சேர்த்து ஆற விடவும். கால்களை மிதமான நீரில் நனைத்து, பின்பு உலர்த்தி, வீட்டில் தயாரித்த இந்த கிரீமை அப்ளை செய்யவும். மீதியை காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி ஜாடியில் வைக்கவும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதை மீண்டும் செய்யவும்.

சரியான காலணிகளை போடவேண்டும். தினமும் காலை தேய்த்து கழுவி சுத்தம் பேண வேண்டும். தட்டையான இடத்தில் தான் நடக்க வேண்டும். குதிகால் உயர்ந்த காலணிகளை தவிர்க்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe