சதுர்த்தி ஸ்பெஷல்: கேரட் அல்வா கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Screenshot_2020_0820_164118

கேரட் அல்வா கொழுக்கட்டை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப், துருவிய கேரட். – ஒரு கப், வறுத்த முந்திரிப் பருப்பு – 5, ஃபுட் கலர் (ஆரஞ்சு நிறம்) – ஒரு சிட்டிகை, காய்ச்சிய பால். – அரை டம்ளர், பொடித்த சர்க்கரை. – ஒரு கப், ஏலக்காய்த்தூள். – ஒரு சிட்டிகை, எண்ணெய், நெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு துருவிய கேரட்டை வதக்கி, காய்ச்சிய பால் விட்டு வேகவிடவும். அதனுடன் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பொடித்த சர்க்கரையைப் போட்டுக் கிளறி இறக்கவும். இதுதான் கேரட் அல்வா பூரணம்.

இரண்டு கப் நீருடன் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும். மாவை சொப்புகளாக செய்து, அதனுள் கேரட் அல்வா பூரணத்தை வைத்து மூடி, 5 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.