OTT தளத்தில் தல அஜித்தின் படம்!

Published:

ajith

வினோத் தற்போது தல அஜித்தை வைத்து வலிமை எனும் படத்தை இயக்கி வருகிறார். கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இதுவரை வந்த போலீஸ் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எடுத்தார்.

இது தல அஜித்துக்கு மிகவும் பிடிக்க உடனடியாக வலிமை படத்திற்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அதற்கு முன்னதாக நேர்கொண்ட பார்வை எனும் படத்தை முடித்துவிட்டு வலிமை படத்தை இயக்கலாம் என கேட்டுக்கொண்டார்.

வினோத் தற்பொழுது இவ்வளவு பெரிய இயக்குனராக மாறுவதற்கு அவரது முதல் படத்தை அனைவரும் கவனிக்கத்தக்க இயக்கியது தான். சதுரங்க வேட்டை எனும் மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தவர்.

சதுரங்க வேட்டை படத்தை மனோபாலா தனது சொந்த தயாரிப்பில் தயாரித்தார்.

Screenshot_2020_0820_165251

முதல் பாகம் வெற்றி அடைந்த உடன் உடனடியாக இரண்டாம் பாகத்துக்கான கதையை கேட்டு வாங்கிக் கொண்டார்.

பின்னர் புதுமுக இயக்குனர் ஒருவரை வைத்து அந்த படத்தை இயக்கினார். அந்த படத்தில் அரவிந்த்சாமி, திரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்தது. இந்த படத்தில் மனோபாலா செய்த சிறு குளறுபடியால் அரவிந்த்சாமி அந்த படத்தின் மீது கேஸ் போட்டுள்ளாராம்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

தற்போது அந்த தடையெல்லாம் நீங்க OTT தளத்தில் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம். சதுரங்க வேட்டை 2 ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img