ஆரோக்கிய சமையல்: குதிரைவாலி கிச்சடி!

Published:

kuthiravali-patchadi

குதிரைவாலி கிச்சடி

தேவையானவை:

குதிரைவாலி அரிசி – ஒரு கப்
காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) – ஒரு கப்
வெங்காயம். – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய். – 4 (இரண்டாகக் கீறவும்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

பட்டை, லவங்கம். – 2
பிரியாணி இலை – 2
மராத்தி மொக்கு. – ஒன்று
எண்ணெய். – தேவையான அளவு

செய்முறை:

குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி, பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் அரிசி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பிறகு மூடியைத் திறந்து, நெய்விட்டுக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Related articles

Recent articles

spot_img